மேலும் அறிய

வனத்துறை கூண்டில் சிக்கிய தாய் கரடி ; தேடி அலையும் குட்டிகள்!

இரும்பு கூண்டில் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி அதிகாலையில் கரடி கூண்டிற்குள் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரடியை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், அதன் மூன்று குட்டிக் கரடிகள் தாய்க் கரடியை தேடி அலைந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் கரடிகள் உலா வருகின்றன. கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதன் காரணமாக, கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி ஒன்று உலா வந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த கரடி குடியிருப்பு பகுதிகளில் நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அந்தக் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப் பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

வனத்துறை கூண்டில் சிக்கிய தாய் கரடி ; தேடி அலையும் குட்டிகள்!

இதையடுத்து வனத் துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதன் பேரில் மிளித்தேன் கிராமத்தில் கரடியை பிடிக்க இரும்பு கூண்டு வைத்தனர். இரும்பு கூண்டில் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி அதிகாலையில் கரடி கூண்டிற்குள் சிக்கியது. கூண்டிற்குள் அடைபட்ட கரடி கூண்டை சேதப்படுத்தி தப்பிக்க முயற்சித்தது. வனத் துறையினர் கூண்டின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வைத்து கரடியை கூண்டை விட்டு, வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் மாற்று கூண்டு வரவழைக்கப்பட்டு, அந்த கூண்டிற்குள் கரடி அடைக்கப்பட்டது. பின்னர் கோரக்குந்தா வனப் பகுதிக்கு கூண்டை கொண்டு சென்ற வனத் துறையினர் கரடியை கூண்டில் இருந்து விடுவித்தனர். இதையடுத்து கூண்டை விட்டு வெளியேறிய கரடி வனப் பகுதிக்குள் சென்றது.

வனத்துறை கூண்டில் சிக்கிய தாய் கரடி ; தேடி அலையும் குட்டிகள்!

இந்த நிலையில் மிளித்தேன் கிராமத்தில் மூன்று கரடி குட்டிகள் உலா வருகின்றன. இந்த 3 குட்டி கரடிகளும், பிடிபட்ட தாய் கரடியின் குட்டிகள் என தெரிகிறது. மேலும் தாயைப் பிரிந்துள்ள குட்டிக் கரடிகள், தாய் கரடியை தேடி கிராமப் பகுதிகளுக்குள் உலா வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் கரடிகளை கண்காணித்து வருகின்றனர்.  மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பது அச்சத்தை அளிப்பதாகவும், தாய்க் கரடியை தேடி அலையும் இந்த குட்டிக் கரடிகளையும் வனத் துறையினர் பிடித்து, தாய் கரடியை விட்ட வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget