மேலும் அறிய

Myv3 ads: மைவி3 ஏட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் சிறையில் அடைப்பு - மைவி3 செயலி முடக்கம்

கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 180 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

மைவி3 ஏட்ஸ்:

அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வருகிறது.

மோசடி புகார்கள்:

இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல அந்நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அடுத்தடுத்து அந்நிறுவனம் மீது புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வந்தது.


Myv3 ads: மைவி3 ஏட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் சிறையில் அடைப்பு - மைவி3 செயலி முடக்கம்

இந்த நிலையில் மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் குறித்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 180 பேர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து மனு அளித்த பிறகே, கலைந்து செல்வோம் என மை வி3 ஏட்ஸ் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 180 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு:

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதனிடையே சக்தி ஆனந்த் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு ஏதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சக்தி ஆனந்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சக்தி ஆனந்தை காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்ட நிலையில் மைவி 3 ஏட்ஸ் செயலி முடங்கியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Embed widget