மேலும் அறிய

'படித்த முட்டாள், அதிமேதாவி, மட்டரகமான அரசியல்வாதி’ - அண்ணாமலையை கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி

”வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கரந்த பால் மடி புகாது என்ற பழமொழிக்கு ஏற்ப, நீங்க சொன்ன ஆளின் கனவு எந்த காலத்திலும் பலிக்காது”

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதனிடையே கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகராட்சியில் 197 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் 113 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் உள்ளிட்ட சாலைப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இன்று 38 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகள் துவக்கப்பட உள்ளன. கூடுதல் நிதி பெற்று கோவை மாநகராட்சியில் விடுபட்ட அனைத்து சாலைகளும் புதிப்பிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

ஆட்சி மாறினால் மின்சாரத்துறை அமைச்சர் சிறை செல்வார் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, “சில பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கின்றனர். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கரந்த பால் மடி புகாது என்ற பழமொழிக்கு ஏற்ப, நீங்க சொன்ன ஆளின் கனவு எந்த காலத்திலும் பலிக்காது” என அவர் பதிலளித்தார்.

படித்த முட்டாள், அதிமேதாவி, மட்டரகமான அரசியல்வாதி’ - அண்ணாமலையை கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி

தொடர்ந்து பேசிய அவர், ”நோட்டோவோடு போட்டி போடுபவர்கள் கோவை மாநகராட்சியில் எவ்வளவு வார்டில் நின்றார்கள்? இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார்? ஏன் மக்கள் விரட்டியத்தனர்? கடுமையான முயற்சி எடுத்தும் அவர்களால் கோவை மாநகராட்சியில் ஒரு வார்டிலும் ஜெயிக்க முடியவில்லை.  ஒரு மாநகராட்சி, நகராட்சியிலும் ஜெயிக்க முடியவில்லை. ஊடக விளம்பரத்திறாக இதுபோல பேசுகிறார். நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், இப்போதே நடவடிக்கை எடுக்கலாம். 

இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சி தேர்தலின் போது, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். அந்தப் பணம்  எங்கே இருந்து வந்தது?காவல் துறையில் பணியாற்றி சேர்த்தாரா? ஆடு மேய்த்து சேர்த்த பணத்திலா கொடுத்தார்? நேர்மையான அதிகாரி என்ற மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளார். ஏன் வேலையை விட்டு விட்டு வந்தார்? எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது.

படித்த முட்டாள், அதிமேதாவி, மட்டரகமான அரசியல்வாதி’ - அண்ணாமலையை கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில்பாலாஜி

பாஜக ஆளும் மாநிலங்களில் நிலக்கரி ஏன் கூடுதல் விலைக்கு வாங்னார்கள்? தமிழ்நாட்டில் குறைவான விலைக்கு நிலக்கரி வாங்கினோம். நீலக்கரி தட்டுப்பாடு இருந்த சூழலில், தட்டுப்பாடு இன்றி மின்சாரம் தந்தோம். ஆனால் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மின்சாரம் இன்றி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் முதலமைச்சர் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் இருப்பார்.

மக்கள் பணியாற்றுபவர்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வந்தால் நடவடிக்கை எடுக்கலாம். கடந்த அதிமுக ஆட்சியில் அணிலால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சொல்லியுள்ளனர். அவர் ஒரு படித்த முட்டாள், அதிமேதாவி. மட்டரகமான அரசியல்வாதி. விளம்பரத்திற்கும், வேலைக்கும் வித்தியாசம் உள்ளது. நீங்க சொன்ன நபர் வெட்டி விளம்பரம் செய்கிறார். அவருக்கு தரம் தாழ்ந்து பதில் சொல்லி நேரத்தை வீண் செய்ய வேண்டாம். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வழக்கு தொடர்வார்கள். 4 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதான எதிர்கட்சி எனச் சொல்வது ஏற்புடையதா?அவர்களை விட கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கங்கள் உள்ளன” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget