மேலும் அறிய

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது.

கோவையில் போதை ஆசாமிகள் போல் நடித்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை கைது செய்த காவல் துறையினர் 1750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மதுக் குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். இதனை பயன்படுத்தி மதுபானங்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது பரவலாக நடந்து வருகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருபவர்களை காவல் துறையினர் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு ஆயத் தீர்வை  அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கரூர் மாவட்டம் வேலகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகேசன் (42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது.  மேலும் முருகேசன் இரவு நேரங்களில் தனக்கு தெரிந்தவர்களுக்கு குடோனில் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கையும், களவுமாக பிடிக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். பின்னர் போதை ஆசாமிகள் போல நடித்து முருகேசனிடம் சென்று மது வேண்டுமென கேட்டுள்ளனர். அப்போது பணத்தை பெற்றுக் கொண்டு மதுபானத்தை கொடுத்த போது, முருகேசனை மது விலக்கு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1750 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முருகேசனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முருகேசன் தனது குடும்பத்துடன் இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருவதும், தடாகம் சாலையில் குடோன் வைத்து காலி மது பாட்டில்களை வாங்கி கம்பெனிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை இலாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த முருகேசனை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
உடைந்த கண்ணாடி வளையல்... மாட்டிக் கொண்ட இட்லி கடை பெண் !! நகைக்காக அரங்கேறிய கொடூரம்
coimbatore power cut: கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (25-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
வன்னியரசை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் - மாட்டுக்கறி விவகாரத்தில் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
Renault Triber Turbo Review: டர்போ எஞ்சினுடன் வந்த ரெனால்ட் ட்ரைபர் எப்படி இருக்கு.? நகரம் முதல் நெடுஞ்சாலை வரை; இதோ ரிவ்யூவ்
டர்போ எஞ்சினுடன் வந்த ரெனால்ட் ட்ரைபர் எப்படி இருக்கு.? நகரம் முதல் நெடுஞ்சாலை வரை; இதோ ரிவ்யூவ்
Ghalibaf Vs Trump:
"அமெரிக்கா பொய் சொல்லுது" ட்ரம்ப்பின் கருத்துக்கு தரமான பதிலடி கொடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப்
Embed widget