மேலும் அறிய

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

கோடநாடு கொள்ளை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருபவர்களிடம் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொள்ளை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த திங்கள்கிழமை சம்மன் வழங்கினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தீபு மற்றும் உதயகுமார் ஆகியோரை இன்றும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரை வரும் 30ஆம் தேதியும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு மூன்றாவது குற்றவாளியாகவும், ஜம்ஷீர் அலி நான்காவது குற்றவாளியாகவும், உதயகுமார் ஏழாவது குற்றவாளியாகவும் ஜித்தின் ஜாய் பத்தாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் பதிவான தகவல் பரிமாறிங்களை  சேகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபு மற்றும் உதயகுமார் ஆகியோர் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு வழக்கு பின்னணி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர். இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget