ஈஷா ஏற்பாடு... விமானத்தில் முதல் தலைமுறை பழங்குடியினர்... இண்டிகோவில் இனிய ட்ரிப்!
பழங்குடியின மக்கள் 41 பேரை முதல் தலைமுறையாக விமானத்தில் ஏற்றிச்சென்ற ஈஷா மையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல் சமூக வலைதளத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையின், சமூக நலப் பிரிவான ஈஷா நற்பணியின் கீழ் தொடங்கப்பட்டது ஈஷா கிராம இயக்கம்.
கிராமப்புற சமுதாயங்களுக்கு புத்துயிர் அளிப்பது, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவது, அவர்களுக்கு நிலையான வாய்ப்புகள் வழங்குவது ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈஷா கிராம இயக்கத்தின் உதவியோடு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் நான்கு கிராமங்களைச் சார்ந்த ஆதிவாசி தொழில்முனைவோர் குடும்பங்களைச் சேர்ந்த 41 நபர்கள், முதன்முறையாகவும் முதல் தலைமுறையாகவும் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Butterflies in the stomach! 41 tribal entrepreneurs are at the Coimbatore airport getting ready to board 6E238, their first ever flight. #KovaiTribalsFirstFlight#TribalsFlyHigh #IshaOutreach @IndiGo6E @DGCAIndia @aaicbeairport pic.twitter.com/OPjxa0dG2P
— Isha Outreach (@Outreach_Isha) July 20, 2022
இன்டிகோ விமானத்தில் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு இவர்கள் பயணித்த நிலையில், இண்டிகோ நிறுவனம் இவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்து பயணத்தை மகிழ்ச்சிகரமாக்கியுள்ளது.
இது குறித்த புகைப்படங்களை இண்டிகோ நிறுவனம் பகிர்ந்துள்ள நிலையில், இத்தகைய அர்த்தமுள்ள சமூக மறுமலர்ச்சி முயற்சிகளை ஒன்றாக ஈஷா நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்ற விரும்புவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Today we had the privilege to fly 41 tribal entrepreneurs from Coimbatore to Chennai and are proud to have partnered with @ishafoundation to fulfil such meaningful community revitalisation efforts together.#LetsIndiGo #Aviation #Proud pic.twitter.com/tc76FZpj47
— IndiGo (@IndiGo6E) July 20, 2022
It’s the big day! A dream come true! Set, packed and ready to go! 41 tribal entrepreneurs, with the support of #IshaOutreach, on the way to the airport for their first ever flight to Chennai. Congrats to these first generation fliers!🛫 #KovaiTribalsFirstFlight #TribalsFlyHigh https://t.co/n1pIMyqRQx
— IndiGo (@IndiGo6E) July 20, 2022
இந்நிலையில், ஈஷா நிறுவனம், இண்டிகோ விமான சேவை இணைந்து நடத்திய இந்த முன்னெடுப்புக்கு கமெண்ட்ஸில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.