மேலும் அறிய

IT Raid: தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவகங்களில் வருமான வரித்துறை சோதனை

கடந்த ஆண்டு 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

IT Raid: தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவகங்களில் வருமான வரித்துறை சோதனை

இந்த நிலையில் இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலையிலிருந்து நடைபெற்று வரும் சோனையில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல காந்திபுரம் பகுதியில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான லாட்டரி அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நிறைவடைந்தால் மட்டுமே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டன என்ற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார்களா?, வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடந்து வருகிறது.

லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது. பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனின், அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சோதனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கேரளாவில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். அதன் பின்னர் 173 கோடி ரூபாய் மதிப்பிலான மார்ட்டினின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். இந்த நிலையில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ABP Southern Rising Summit 2023 LIVE: ”பிரபலமாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை" - நடிகர் ராணா டகுபதி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

Canada PM: ட்ரூடோ கதை ஓவர்..!  வந்ததுமே ட்ரம்பை அட்டாக் செய்த கனடாவின் புதிய பிரதமர் - யார் இந்த மார்க் கார்னி?

Sunita Williams: ஆளவிடுங்கடா சாமி..! 9 மாத விண்வெளி வாழ்க்கை ஓவர் - பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்

ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
IND vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் - யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?
Canada PM: ட்ரூடோ கதை ஓவர்..!  வந்ததுமே ட்ரம்பை அட்டாக் செய்த கனடாவின் புதிய பிரதமர் - யார் இந்த மார்க் கார்னி?
Canada PM: ட்ரூடோ கதை ஓவர்..! வந்ததுமே ட்ரம்பை அட்டாக் செய்த கனடாவின் புதிய பிரதமர் - யார் இந்த மார்க் கார்னி?
Sunita Williams: ஆளவிடுங்கடா சாமி..! 9 மாத விண்வெளி வாழ்க்கை ஓவர் - பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: ஆளவிடுங்கடா சாமி..! 9 மாத விண்வெளி வாழ்க்கை ஓவர் - பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Champions Trophy 2025: தடைகளை உடைத்த இந்தியா - சாதனைகளை குவித்த ரோகித் & கோலி - மைதானத்தில் உற்சாக நடனம்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!

ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க

Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 

அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?

Embed widget