செல்ஃபோன்கள், கம்யூட்டர்கள்.. பூட்டை உடைத்து ஆட்டைபோட முயன்ற முன்னாள் காவலர் கைது..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மூனிஸ்வரன் (35) என்பதும், கோவைப்புதூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியதும் தெரியவந்தது.
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய முனீஸ்வரன் என்ற முன்னாள் காவலரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். 2 பெண் குழந்தைகளுடன் நிர்மலா சில நாட்கள் தனது தாய் வீட்டிலும், சில நாட்கள் தனது வீட்டிலும் வசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாருமில்லாதை அறிந்த 2 பேர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, வீட்டிற்குள் இருந்த இருவரும் மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே இருவரும் பொருட்களுடன் வீட்டை விட்டு வெளியேறி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பொது மக்கள் இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த நபரை கருமத்தம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் முன்னாள் காவலர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மூனிஸ்வரன் (35) என்பதும், கோவைப்புதூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியதும் தெரியவந்தது. கடந்த 2017 ம் ஆண்டு இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் மூனிஸ்வரன் கைது ஆனதால் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்த நிலையில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் காவலரான முனீஸ்வரன் செல்போன் திருட்டு வழக்கு, கோவை பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தை சேர்ந்த 2 மூதாட்டிகளிடம் நடை பறித்த வழக்கிலும் ஏற்கனவே கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மூனிஸ்வரனை கைது செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய அவரது கூட்டாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருட்டு வழக்கில் முன்னாள் காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
https://bit.ly/2TMX27X
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
https://bit.ly/3AfSO89
ட்விட்டர் பக்கத்தில் தொடர
https://bit.ly/3BfYSi8
யூடிபில் வீடியோக்களை காண
https://bit.ly/3Ddfo32