மேலும் அறிய

’லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை’ - எஸ்.பி.வேலுமணி

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. 7500 ரூபாய் பணம், அம்மாவின் கம்மல் உள்ளிட்ட சிறு பொருட்களை எடுத்துள்ளனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை - வேலுமணி

அதிமுக ஆட்சிக் காலத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். கோவை மாநகரில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் இல்லம், சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம்,  ஏஸ் டெக் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

’லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை’ - எஸ்.பி.வேலுமணி

கோவையில் சுகுணாபுரம்  பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர். அதிமுக தொண்டர்கள் குவிய அனுமதி மறுத்த காவல் துறையினர், அங்கு திரண்டிருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அப்போது அதிமுக தொண்டர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் காவல் துறையினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகேயுள்ள வீடுகளுக்குள் சென்றும் தேடியும் காவல் துறையினர் அதிமுகவினரை கைது செய்தனர்.

’லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை’ - எஸ்.பி.வேலுமணி

9 மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை இன்று மாலை நிறைவடைந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்தது. தொடர்ந்து காவல் துறையை தவறான முறையில் திமுக பயன்படுத்துகிறது. எந்த முதலமைச்சரும் இது போல நடந்து கொள்ளவில்லை. இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. 7500 ரூபாய் பணம், அம்மாவின் கம்மல் உள்ளிட்ட சிறு பொருட்களை எடுத்துள்ளனர்.

’லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை’ - எஸ்.பி.வேலுமணி

இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு முறை நடந்த சோதனையிலும் எதுவும் கைப்பற்றவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்ததால் வழக்கு போடுகிறார்கள். அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றினோம். இதனால் பழிவாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

’லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை’ - எஸ்.பி.வேலுமணி

மின்சார கட்டண உயர்வை திசை திருப்ப சோதனை நடைபெற்றது. திமுக அரசு பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுகவினரை முழுமையாக பழிவாங்குகிறார்கள். ரெய்டு மூலம் காவல் துறையை வைத்து திமுக அரசியல் செய்கிறது. நீதிமன்றத்தில் எனது வழக்கு வரும் போது எல்லாம், பொய் செய்தியை பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பு அளித்தோம். அதிமுக தொண்டர்கள், வக்கீல் சட்டையை கிழித்து துன்புறுத்தி, மண்டபத்தில் அடைத்துள்ளார்கள். காவல் துறை அத்துமீறலில் ஈடுபட்டார்கள். இது அரசியல் பழிவாங்குதலில் உச்சகட்டம். 

’லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை’ - எஸ்.பி.வேலுமணி

வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும். மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வருவார். மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை முடக்க சோதனை நடத்தியுள்ளார்கள். எல்இடி திட்டம் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கை திமுக போடுகிறது. எல்லா ஒப்பந்தமும் சட்டப்படி நடந்துள்ளது. ஸ்டாலின் என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் முடியாது. 

’லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை’ - எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் அமைச்சர்களிடம் ஸ்டாலின் குடும்பம் வாங்கியுள்ளது. திமுக அரசு மீடியாவை மிரட்டி, காவல் துறை கைக்கூலியாக வைத்துக் கொண்டு எந்த திட்டத்தையும் செய்யாத கையாளாத அரசாக உள்ளது. எந்த திட்டத்தையும் திமுக செய்யவில்லை. அதிமுக ஆட்சியை கவிழ்க்க விடாமல் தடுத்து அதிமுக கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் முக்கிய எதிரியாக என்னை ஸ்டாலின் நினைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget