Flood Warning: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - வேகமாக நிரம்பும் பில்லூர் அணை
பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை:
100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையில் தற்போது 94.5 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கான விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ள நிலையில், மின் உற்பத்திக்காக 6000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கான நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை:
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 38 செமீ மழை பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் அதிகபட்சமாக மழையாக அவலாஞ்சியில் பதிவாகியுள்ளது. இதே நிலையில் மழை தொடர்ந்தால், அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், அணைக்கான நீர்வரத்து மொத்தமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.