மேலும் அறிய

இரவு நேரத்தில் ரயில்பாதையை கடக்க முயன்ற யானை ரயில் மோதி உயிரிழப்பு! பாலக்காட்டில் சோகம்!

பன்னிமடை இரயில்வே கேட் அருகே பெண் யானை ஒன்று இரயில் பாதையை கடக்க முயன்றது. அப்போது பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் இரயில் யானை மீது மோதியது.

கோவை மாவட்டம், போத்தனூர் முதல் கேரள மாநிலம் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில்,மதுக்கரை வாளையாறு வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கோவையில் இருந்து செல்லும் பாதை ஏ லைன் எனவும் கேரளாவில் இருந்து வரும் பாதை பி லைன் என அழைக்கப்படுகிறது.இதில் வனப்பகுதி வழியாக  ரயில்கள் செல்லும்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட வேகத்தை விட அதி வேகமாக ரயில்கள் இயக்கப்படுவதால் அவ்வப்போது தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது. மேலும் கடந்த 2021 நவம்பர் மாதம் மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில் ரயில் மோதியதில் கருவுற்ற பெண் யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்த நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் இரயில் பாதையில் யானைகள் அதிகமாக தண்டவாளத்தை  கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில்  யானைகள் இரயில் பாதையை கடக்கும் வகையில் இரண்டு இடங்களில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக வனப்பகுதியான மதுக்கரை வனச்சரகத்தில் ஏ.ஐ எனப்படும் நவீன கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி இரயில் பாதை அருகே வரும் போதே, அலாரம் மற்றும் எச்சரிக்கை செய்தி வனத்துறை மற்றும் இரயில்வே துறை அதிகாரிகளுக்கு சென்று விடுவதாலும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் இரயில் பாதையை கடக்க உதவி செய்வதால் யானைகள் இரயிலில் அடிபடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

பெண் யானை உயிரிழப்பு

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கேரள மாநிலம் வாளையாறு அடுத்த பன்னிமடை இரயில்வே கேட் அருகே பெண் யானை ஒன்று இரயில் பாதையை கடக்க முயன்றது. அப்போது பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் இரயில் யானை மீது மோதியது. இதில் யானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், அந்த யானை அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள நீரோடைக்கு சென்றது. மேலும் இரயில் மோதியதில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடியது. இது குறித்து இரயில்வே அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து இது குறித்து பாலக்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளில் பாலக்காடு - மதுக்கரை இடையே ரயிலில் அடிபட்டு 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் இரயில் பாதையை இரவு நேரங்களில் கடக்கும் போது அதி வேகமாக வரக்கூடிய இரயில்கள் மோதுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில் ஒரு சில ரயில் ஓட்டுநர்கள் இதனை கடைபிடிக்காததால், இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு இடங்களில் யானைகள் இரயில் பாதை கடக்கும் வகையில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது அதுபோக ஏ.ஐ எனப்படும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகளில் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கேரள வனப்பகுதிக்குள் யானைகள் கடக்கும் பகுதிகளை  கண்டறிந்து  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget