மேலும் அறிய

கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் விவசாயி கைது

சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலி காரணமாக காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயி மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. துடியலூர் அடுத்த வரப்பாளையம், பன்னிமடை பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் ஏராளமான யானைகள் இந்த பகுதி வழியாக வலசை செல்வது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வரப்பாளையம் கிராமத்திற்குள் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது வாழை தோட்டத்திற்குள் சென்றுள்ளது. இது குறித்து மனோகரன் வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப் பகுதிக்கு விரட்டினர்.

இதனிடையே பிப்ரவரி 12 ஆம் தேதியன்று காலை மனோகரின் வாழை தோட்டத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினர். ஆய்வு மேற்கொண்டதில் உயிரிழந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், அதன் தும்பிக்கை தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. மின் வாரிய அதிகாரிகள், கால் நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் சம்பவ நடந்த தோட்டத்தை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து யானை இறப்பு குறித்து தோட்ட உரிமையாளர் மனோகரனிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் விவசாயி கைது

அதில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலி காரணமாக காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயி மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் வனத் துறையினர் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக பதுங்கியிருந்தவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள், நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த விவசாயி மனோகரன் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்துள்ளார். அப்போது பன்னிமடை பேருந்து நிலையம் பகுதியில் மனோகரனை வனத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மகன் நரேஷை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.  இதனிடையே காட்டு யானைகள் உயிரிழப்புகள் தொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் இன்று விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தற்போது விவசாயி மனோகரன் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget