மேலும் அறிய

'சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல?' - கோவையை பரபரபாக்கிய திமுக போஸ்டர்கள்

சுவரொட்டிகளில், 'சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல?' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

கோவைக்கு வருகை தந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், 'சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல?' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

கோவை பந்தயச் சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பந்தாரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே கோவைக்கு வருகை தந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்கும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 


சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல?' - கோவையை பரபரபாக்கிய திமுக போஸ்டர்கள்

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் "சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல?" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சுவரொட்டிகளில் உள்ள வாசகங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

*இன்று (8.9.2022 வியாழக்கிழமை) கோவை வருகை தந்த மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களை,*
*கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.அவர்கள் வரவேற்ற போது.* pic.twitter.com/eLl8M2RmTI

— நா .கார்த்திக் எக்ஸ் எம் எல் ஏ (@nkarthikexmla) September 8, 2022

">

இதனிடையே பந்தயசாலை பகுதியில் நடைபெற்ற நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”பாரம்பரியமான வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்த தான் சட்டம் படிக்கவில்லை என்றாலும், சட்டம் மற்றும் நீதித்துறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நிகராக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 

ஜனநாயகத்தை காக்கும் கடைசி பொறுப்பு நீதிமன்றத்துக்கு தான் உள்ள நிலையில், நீதித்துறைக்கு போதிய நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதில்லை. தமிழக பட்ஜெட்டிலும் நீதித் துறைக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. அதிகமான வழக்குகளை கையாளும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களை வலுப்படுத்துவது அவசியமாக உள்ளது. முதல்வரும், நான் பொறுப்பு வகிக்கும் நிதித் துறையும், நீதித் துறை கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
Coimbatore power cut: கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget