மேலும் அறிய

Covai Accident: கார் மோதி வானில் பறந்த பைக்... மகனை அழைத்துச் சென்ற தந்தை உயிரிழப்பு - கோவையில் கோர விபத்து

கோவையில் அதிவேகமாக வந்த கார் மோதி பைக் தூக்கி வீசப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின், பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவையில் அதிவேகமாக வந்த கார் மோதி பைக் தூக்கி வீசப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின், பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மகனை அழைத்துச் சென்ற தந்தை:

கோவை பொள்ளாச்சி அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மலை (15) திருச்சியில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை நவக்கரை பகுதியில் இருந்த பயிற்சியாளரிடம் விட தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார்.

கோர விபத்து:

பொள்ளாச்சியில் இருந்து வேலந்தாவளம் வழியாக வந்த ஜாகிர் உசேன், கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஜாகிர் உசேன் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட, சாலையில் விழுந்து படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் அஜ்மல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தானது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து நிகழ்ந்தது எப்படி?

அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் படி, குறுகலான சாலையில் கறுப்பு நிற காருக்கு பின்பு அதிவேகமாக வந்த ஒரு சில்வர் நிற கார், திடீரென வலது பக்கமாக ஏறியுள்ளது. அப்போது எதிர்புறமாக வந்த பைக்கின் மீது மோதியதில், அந்த வாகனம் சுக்குநூறாக உடைந்து காற்றில் பறந்து பின்புறமாக வந்த மற்றொரு வாகனத்தின் முன்பக்கத்தில் சொருகியுள்ளது. இதில், பல அடி தூரம் சென்று விழுந்த ஜாகிர் உசேன் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதோடு, தூக்கி வீசப்பட்ட பைக் சென்று சொருகியதால் எதிரே வந்த டிராவல்ஸ் வாகனத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.

போலீசார் விசாரணை:

விபத்தை கண்ட அருகே இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து உயிருக்கு போராடிய சிறுவன் அஜ்மலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிந்த ஜாகிர் உசேன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
DRAGON Hero Pradeep: சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
DRAGON Hero Pradeep: சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
Gold Rate: போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
போற போக்க பாத்தா, இறங்க வாய்ப்பில்ல போலயே.?!! உச்சியிலேயே இருக்கும் தங்கம் விலை...
Telangana Tunnel: கண்முன்னே பறிபோகும் 8 உயிர்கள்? சுரங்கப்பாதையை அடைத்த தண்ணீர், சேறு & சகதியால் பிரச்சனை
Telangana Tunnel: கண்முன்னே பறிபோகும் 8 உயிர்கள்? சுரங்கப்பாதையை அடைத்த தண்ணீர், சேறு & சகதியால் பிரச்சனை
ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா நாமம் வாழ்க! – வேதா இல்லத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து – 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Embed widget