கோவையில் இன்று 70பேருக்கு கொரோனா தொற்று
கோவையில் இன்று மீண்டும் தொற்று பாதிப்புகள் குறைந்து, தினசரி பாதிப்புகள் 100 க்கும் கீழ் வந்துள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 111 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், கோவை மூன்றாவது இடத்தில் உள்ளது.
கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தொற்று பாதிப்புகள் குறைந்து, தினசரி பாதிப்புகள் 100 க்கும் கீழ் வந்துள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 111 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 70 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 42பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 793 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2617 ஆக உள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 7 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 132777 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 131989 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 734 ஆகவும் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 4 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 55 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 5 பேர் குணமடைந்துள்ளனர் . கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 130025 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 128918 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1052 ஆக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 7 பேர் குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேசமயம் நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 42259 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41973 ஆகவும் உள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 226 ஆக உள்ளது.