கோவை: ஒரேநாளில் 120 பேருக்கு கொரோனா தொற்று
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளது. தினசரி பாதிப்பில் கோவை நான்காம் இடத்தில் உள்ளது. கோவையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 15 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவையில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 53 ஆயிரத்த 755 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 311 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,518ஆக உள்ளது.
ஈரோடு,, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 1,07,895 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,06,791 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 711ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 53 பேர் குணமடைந்துள்ள நிலையில், 473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 98,857ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97,357 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,027 ஆக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 10பேர் குணமடைந்துள்ள நிலையில், 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 34,466 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,193ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )