கோவையில் இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று!
கடந்த வாரங்களில் குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அவ்வப்போது கொரோனா பாதிப்புகளில் சென்னை முதலிடம் பிடிப்பதும், மீண்டும் கோவை முதலிடம் பிடிப்பதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருப்பதால், கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் கடந்த வாரங்களில் குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று 8 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவையில் இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 369 பேராக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2433 ஆக உள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோட்டில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 2 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 57 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 105009 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 103541 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 692 ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 51 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. 63 பேர் குணமடைந்துள்ள நிலையில், 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 96102 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 94446 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 983 ஆக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 19 பேர் குணமடைந்துள்ள நிலையில், 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 33758 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33341 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 213 ஆக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )