மேலும் அறிய

ஆப்பிரிக்க பெண்ணை கரம்பிடித்த கோவை இளைஞர்.. இரண்டு ஸ்டைலில் நடந்த திருமண விழா..

முத்து மாரியப்பன் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த வால்மி இனாங்கா மொசொக்கே ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம், தர்மலட்சுமி ஆகியோரின் மகன் முத்து மாரியப்பன். இவர்கள் தற்போது கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று அங்குள்ள ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.  அங்கு முத்து மாரியப்பன் பணிபுரிந்த அதே நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகளான வால்மி இனாங்கா மொசொக்கே ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணப் பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று, இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 

ஆப்பிரிக்க பெண்ணை கரம்பிடித்த கோவை இளைஞர்.. இரண்டு ஸ்டைலில் நடந்த திருமண விழா..

இதற்கு அவரது தாயாரும் உறவினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களது உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் இன்று கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ முத்து மாரியப்பன், வால்மி இனாங்கா மொசொக்கே திருமணம் வெகு விமரிசையாக இந்து முறைப்படி நடைபெற்றது.

இதில் மணமகளை பட்டு புடவை கட்டி அவரது உறவினர்கள் மலர் பந்தலின் கிழ் ஊர்வலமாக மண மேடைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து புரோகிதர் வேத மந்திரம் ஓத ஆப்பிரிக்க மணப் பெண்ணான வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு தமிழக மணமகன் முத்துப்பாண்டி தாலி கட்டினார். தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டு அம்மி மிதித்து மெட்டி அணிவித்தார். அதேபோல் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தனர். தொடர்ந்து உறவினர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

ஆப்பிரிக்க பெண்ணை கரம்பிடித்த கோவை இளைஞர்.. இரண்டு ஸ்டைலில் நடந்த திருமண விழா..

இது குறித்து பேசிய மணப்பெண் வால்மி இனாங்கா மொசொக்கே வணக்கம் என தமிழில் பேச தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியக் கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், இந்தியர்களை பிடிக்கும் எனவும், அதனால் இந்து முறைப்படி திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார். பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால் இந்தியா வந்து திருமணம் செய்துள்ளதாகவும், இதன் மூலம் தானும் இந்தியாவில் ஒருவர் ஆகிவிட்டதாகவும் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget