மேலும் அறிய

கையை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத முதியவர்; ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டி தபால் விநியோகம்

ஒற்றைக் கையோடு சைக்கிளில் பயணிக்கிறோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் சர்வ சாதாரணாமக தனது பயணத்தை மேற்கொள்ளும் இந்த முதியவர் நாள் ஒன்றுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் கோவையை வலம் வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ராமன். 80 வயதான இவர், தனது ஆரம்ப கால கட்டத்தில் தனியார் பேருந்தின் நடத்துநராக பணியாற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீ ராமனை பசுமாடு கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. செயற்கை கை பொருத்தி பார்த்தும், அது சரிவரவில்லை. ஆனாலும், அவர் தன்னம்பிக்கை உடன் சைக்கிள் ஓட்டிப் பழகினார்.

கையை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத முதியவர்; ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டி தபால் விநியோகம்

இந்த நிலையில், 1971 ம் ஆண்டில் இவருக்கு அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டராக வேலை கிடைத்தது. 37 ஆண்டு காலம் ஒற்றை கையோடு போஸ்ட் மாஸ்டர் வேலை செய்த பின்னர் இவர் பணி ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகளுக்காக  கோவை தடாகம் பகுதியில் குடி இருந்து வருகிறார். தனது அனுபவத்தைக் கொண்டு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஸ்ரீ ராமன் வேலைக்கு சேர்ந்தார்.

கையை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத முதியவர்; ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டி தபால் விநியோகம்

தனது வாழ்க்கை காலம் முழுவதிலும் உழைக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் இந்த முதியவர் தள்ளாத வயதிலும், ஒற்றைக் கையோடு சைக்கிளில் பயணித்து கொரியர் விநியோகம் செய்து வருகிறார். தடாகம் பகுதியில் இருந்து தினமும் சாய்பாபா காலனி வரை பயணித்து தனியார் கொரியர் நிறுவனத்திற்கு வரும் இவர், அங்கு பார்சல்களை பெற்றுக் கொண்டு வீடு வீடாக விநியோகம் செய்கிறார். ஒற்றைக் கையோடு சைக்கிளில் பயணிக்கிறோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் சர்வ சாதாரணாமக தனது பயணத்தை மேற்கொள்ளும் இந்த முதியவர் நாள் ஒன்றுக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வரை சைக்கிளில் கோவையை வலம் வருகிறார்.

கையை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத முதியவர்; ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டி தபால் விநியோகம்

இது குறித்து ஸ்ரீ ராமன் கூறுகையில், “எனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் காலை 5 மணிக்கே எழுந்து சமையல் செய்து சாப்பிட வைத்து, மருந்து கொடுத்து விட்டு 11 மணிக்கு பணிக்கு வருகிறேன். கொரியர் நிறுவனத்தின் மூலம் 7,500 ரூபாய் மாத வருமானம் கிடைக்கிறது. அதை வைத்து மனைவிக்கு மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு மாத்திரை வாங்கி கொடுக்க வேண்டும். சைக்கிள் ரிப்பேர் செய்ய வேண்டும். புது சைக்கிள் வாங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லை.  

கையை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத முதியவர்; ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டி தபால் விநியோகம்

வருகின்ற வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறேன். வயது ஒரு பொருட்டல்ல. உடலில் வலு இருக்கும் வரை உழைப்பேன். ஒரு நாளும் நான் சும்மா உட்கார்ந்ததே இல்லை. எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் எந்த சிரமமும் இல்லை. என் வாழ்க்கை முழுவதும் உழைத்தே கழிப்பேன்." என அவர் தெரிவித்தார். கையை இழந்தாலும் ஒற்றை கையோடு முதிய வயதிலும் உழைத்து வாழும் ஸ்ரீ ராமன், இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget