Coimbatore Metro Rail: கோவைக்கு இப்படி ஒரு திட்டமா..? வேலைக்கு செல்வோருக்கு வரப்பிரசாதம்; குஷியில் மக்கள்
Coimbatore Metro Rail Project: கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்புத்தூரில் விமான நிலையத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வரை 20.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த 154 கோடி ரூபாயை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒதுக்கியுள்ளது.
154 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் திட்டம்
கோயம்புத்தூரில் சத்தியமங்கலம் சாலை பகுதியில் 1.1 கிலோமீட்டர் நீளத்திற்கு முதல் கட்டமாக மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி தேவைப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிமிடெட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விரைவில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் சிஎம்ஆர்எல் CMRS அமைப்பும் இணைந்து நிலம் தொடர்பான ஆய்வு பணிகளில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் உறுதி செய்யப்பட்டவுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள். கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அண்மையில் சென்னையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
விமான நிலையத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ
இந்த பேச்சு வார்த்தையில் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும் அதற்கான நிலம் கையகப்படுத்துதல் திட்டத்திற்கான நிதி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. முதல் மெட்ரோ காரிடார் என்பது கோயம்புத்தூரில் விமான நிலையத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வரை 20.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது .
இரண்டாவது மெட்ரோ ரயில் காரிடார் கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்திலிருந்து வாளியம்பாளையம் பிரிவு வரை அமைக்கப்படுகிறது. இது 14.4 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் டெக்ஸ்டூல் ரயில்வே பாலத்திலிருந்து சூர்யா ஹாஸ்பிடல் வரையிலான பகுதி மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் அங்கே ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டால் அங்கே இன்னும் நெரிசல் அதிகமாகும் என கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்
இந்த சாலையை அகலப்படுத்துவதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் 54 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்திருப்பதாகவும் இதனை 3.1 கிலோமீட்டர் அகலம் கொண்ட சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் டெக்ஸ்டூல் மேம்பாலத்திலிருந்து சூரியா ஹாஸ்பிடல் வரையிலான பகுதியில் 24 மீட்டர் அகலம் கொண்ட நிலத்தை கையகப்படுத்தி கையகப்படுத்துவதற்காக CMRS சார்பாக 154 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விரிவான திட்ட அறிக்கை தயார் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வருவாய் துறை அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறைவு செய்த உடன் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறும் என கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் கோவையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்..
ALSO READ | அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

