மேலும் அறிய

கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என ஆட்சியர் அறிவிப்பு

”ஒமிக்ரான் தொற்று பாதித்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வெளி நாடுகளில் இருந்து வந்த 19 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் அவர்களில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை”

கோவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவங்கி வைத்தார். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சிறார் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தால் 1.61 லட்சம் மாணவர்கள் பயன் பெற உள்ளனர். 671 பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகின்றது. முதல் நாளான இன்று 81 மையங்களில் 16 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பின் உடல்நிலை பாதிப்பு இருந்தால் மட்டும் அவர்களுக்கு  விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு மட்டும் கண்டறியப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று இல்லை. வெளி நாடுகளில் இருந்து வந்த 19 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் அவர்களில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. கொரொனா தொற்று பரவல் அதிகரித்து இருப்பதால், கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரொனா விதிமுறை மீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

கோவையில் டெங்கு பாதிப்பு இருக்கிறது. ஒரு சில இடங்கள் ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். மாவட்டத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் 33 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கொரொனா வழிகாட்டுதல்களால் போட்டி நடத்துவதா என்பது குறித்து மாநில  அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கின்றோம்” என தெரிவித்தார்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget