மேலும் அறிய

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கோவை மாநகராட்சி பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..!

பள்ளியில் போதிய அடிப்படை வசதி மற்றும் சத்துணவு வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி ஐ.ஓ.பி. காலனி. இப்பகுதி மாநகராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதி மற்றும் சத்துணவு வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கோவை மாநகராட்சி பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..!

இந்த பள்ளியில் சத்துணவுக் கூடம் இருந்த போதும், அங்கு உணவு சமைக்கப்படுவதில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு அருகேயுள்ள கல்வீரம்பாளையம் துவக்கப் பள்ளியில் சமைக்கப்படும் சத்துணவு ஆட்டோவில் கொண்டு வரப்படுகிறது. அப்படிக் கொண்டு வரப்படும் சத்துணவும் சுகாதாரமற்ற முறையில் கொண்டு வரப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் புகார் அளித்தாலும் முறையான பதில் அளிப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கோவை மாநகராட்சி பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..!

பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் நிரப்படாமல் காலியாக இருப்பதாகவும், போதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை எனவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்க், தண்ணீர் தொட்டி ஆகியவை மூடப்படாமல் இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை எனவும், கழிப்பறை உள்ள பகுதியில் புதர் மண்டிக் கிடப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கோவை மாநகராட்சி பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..!

செப்டிக் டேங்க அருகேயுள்ள கட்டிடம் பழுதடைந்து சாய்ந்த நிலையில் இருப்பதாகவும், பள்ளி சுற்று சுவர் விரிசல் அடைந்து கிடப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கோவை மாநகராட்சி பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..!

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், “மாணவர்களுக்கு சத்துணவு கொண்டு வர மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஆட்டோவிற்கு பெற்றோர்கள் கொடுத்து வருகிறோம். உணவு கொண்டு வரும் பாத்திரமும் பெற்றோர்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். சுகாதாரமற்ற முறையில் சத்துணவு கொண்டு வரப்படுகிறது. முறையான மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறப்படுவதில்லை. மாணவர்கள் தான் சக மாணவர்களுக்கு உணவு பரிமாறும் நிலை உள்ளது.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத கோவை மாநகராட்சி பள்ளி - மாணவர்கள் கடும் அவதி..!

கழிப்பறை வசதியில்லை. பள்ளி வளாகத்தில் திறந்திருக்கும் தொட்டிகளால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கட்டிடங்கள் விரிசல் அடைந்துள்ளன. குழந்தைகள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
coimbatore power cut: கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (03-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்
கோயம்புத்தூர் பெண்களுக்கு புதிய வாய்ப்பு! 50 தொழில்முனைவோருக்கு 6 மாத பயிற்சி... ‘வி-ரைஸ்’ திட்டம் தொடக்கம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget