மேலும் அறிய

‘தமிழ்நாட்டில் முதன்முறை’ மேம்பாலத்தில் ஹை-டெக் கேமரா – எங்கு தெரியுமா..?

கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடியில் ஏ.ஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்.

கோவை - அவிநாசி சாலை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடியில் ஏ.ஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி இன்று (பிப்.06) முதல் தொடங்குகிறது.

10 கிலோ மீட்டர் பாலம்

கோவை - அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ரூபாய் 1,671 கோடியில் இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல் நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இந்த பாலம் பெற்று உள்ளது.

இந்த மேம்பாலத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதனை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சில வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் பிரிவு சார்பில் ரூபாய் 3 கோடியில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கேமரா அமைக்கும் பணியானது இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. மேம்பால சந்திப்பு பகுதிக்கான கோல்டுவின்ஸ், உப்பிலிபாளையம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.

8 பாலங்களில் 44 இடங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப கேமரா

இது தவிர அண்ணா சிலை, நவஇந்தியா, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, ஹோப் காலேஜ், கொடிசியா , விமான நிலையம் சந்திப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் உள்ள ஏறும் மற்றும் இறங்கு தளங்கள் அபாய வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில் என மொத்தம் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.கண்காணிப்பு கேமரா உயரமான கம்பிகளின் மீது பொருத்தப்படும் இதில் வாகனங்களின் பதிவு எண், உள்ளே அமர்ந்து இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறார்களா ? இல்லையா ? அதிவேகத்தில் வாகனங்கள் செல்கிறதா ? கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறதா ? அதிக எடையில் வாகனங்களில் லோடு ஏற்றப்பட்டு இருக்கிறதா ? போன்ற அனைத்து விதமான போக்குவரத்து விதிகளையும் கண்டறிய முடியும், வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் உடனடியாக அந்த வாகனங்களின் வேகம், கேமரா டிஸ்ப்ளே பகுதியில் வாகன ஓட்டிகள் காணும் வகையில் தெரிவிக்கப்படும். மேலும் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவுகள் இணைக்கப்பட்டு எந்த வாகனமும் போக்குவரத்து விதிமுற மீறலில் இருந்து தப்பிக்க முடியாது. மேம்பாலத்தில் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும், இதனை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கேமரா பொருத்தும் பணி சில நாட்களில் நிறைவடையும், தமிழகத்தில் வேறு எந்த மேம்பாலங்களிலும் இதுபோன்ற ஏ ஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை, கோவையில் முதல் முறையாக அமைக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (20-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget