மேலும் அறிய

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்! பரிதாபமாக பறிபோன தொழிலாளி உயிர் - கோவையில் சோகம்

கூலித்தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து குடிபோதையில் இருந்த ஓட்டுநரை சக ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்திபுரத்தில், மாநகர பேருந்து நிலையம், பிற மாவட்டங்களுக்கு செல்லும் மத்திய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையம் ஆகியவை தனித்தனியாக அமைந்துள்ளனர். கோவை மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்துகளுக்கு இடையே சிக்கி பயணி உயிரிழப்பு:

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.  இன்று காலை பணிகளுக்கு செல்வதற்காகவும், ஊர்களுக்கு செல்வதற்காகவும் ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது காந்திபுரம் - காந்திபார்க் இடையே இயக்கப்படும் 7 என்ற எண்ணிட்ட தனியார் பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது.

இந்த பேருந்தை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் திருநாவுக்கரசு என்பவர் இயக்கினார். அப்போது திடீரென திருநாவுக்கரசு கவனக் குறைவாக திடீரென பேருந்தை பின்னோக்கி நகரத்தியதாக கூறப்படுகிறது. இதில் பின்னால் இருந்த பேருந்தை தாண்டிச் செல்ல முயன்ற ஒருவர், இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுபோதையில் ஓட்டுநர்:

இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் திருநாவுக்கரசை கீழே இறக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்ததால், அவர்கள் அவரை சராமரியாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது, உயிரிழந்தவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடிபோதையில் இருந்த ஓட்டுநர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பேருந்து நிலையத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று, பேருந்திற்காக நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : TN Weather Update: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! மற்ற மாவட்டங்களில் என்ன நிலை? வானிலை நிலவரம்

தலைப்பு செய்திகள்

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget