மேலும் அறிய

வால்பாறையில் சுற்றித்திரிந்த பெண் புலி சிக்கியது - சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரம்...!

’’வேட்டையாடும்போது மற்ற விலங்குகளுடன் சண்டை போட்டதால் புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது’’

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உடல் நலக்குறைவுடன் சுற்றித் திரிந்த புலியினை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த பகுதி அதிகளவிலான தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. காடுகள் சுருக்கம், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், இதன் காரணமாக மனித வன விலங்கு மோதல்கள் நடப்பதும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள முடிஸ் பகுதியில் நேற்று பட்டப் பகலில் புலி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து  மானாம்பள்ளி வனத் துறையினருக்கு அனுப்பினர். இதனை தொடர்ந்து புலியை தேடும் பணியில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக ஊழியர்கள் ஈடுபட்டனர். தேயிலை தோட்டங்கள், முட்புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் புலி பதுங்கி இருக்கிறதா எனத் தேடினர். இந்நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் முடிஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது.

வால்பாறையில் சுற்றித்திரிந்த பெண் புலி சிக்கியது - சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரம்...!

இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தேயிலை தோட்டத்திற்குள் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஒரு புதருக்குள் புலி பதுங்கியிருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இதையடுத்து புலியை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த  புலியை வேட்டைத் தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த படி சென்று, வலை வீசி புலியை பிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் பிடிபட்ட புலியை கூண்டிற்குள் அடைத்தனர்.

வனத்துறையினரிடம் பிடிபட்ட புலி சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பதும், உடல்நலக் குறைபாடுடன் சுற்றி வந்ததும் தெரியவந்தது. வேட்டையாடும் பொழுது மற்ற வன விலங்குகள் உடன் சண்டை போட்டதால், உடலில் காயம் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் உள்ளதாக  வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கூண்டிற்குள் அடைக்கப்பட்ட புலி ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் மற்றும் தடுப்பு மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு புலிக்கு வனத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் புலியின் உடல் நிலையை தொடர்ந்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். புலியின் உடல் நிலை தேறுவதை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
Embed widget