மேலும் அறிய

”அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு கிடைக்கும்” – அதிகாரி பதிலால் கோவையில் மாணவிகள் வேதனை...

கோவை ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மற்றும் புழுக்கள் இருந்ததாக மாணவிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவு வழங்கப்பட்டதாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 13 மாணவிகள் விடுதிகளும், 13 மாணவர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட இந்த விடுதிகளுக்கு வெள்ளலூரில் செயல்படும் ஒருங்கிணைந்த சமையல் மையத்தில் இருந்து உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மற்றும் புழுக்கள் இருந்ததாக மாணவிகள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த மாணவிகள், கோவை துணை ஆட்சியருக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் கூறுகையில், “கடந்த பத்து மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருகிறது. பலமுறை விடுதி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பினோம்” என்றனர்.

மேலும், “புகார் தொடர்பாக தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு வழங்கப்படும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார்” என்றும் மாணவிகள் குற்றம்சாட்டினர்.

தற்போது மாணவிகளின் கருத்துகளை அதிகாரிகள் பதிவு செய்து, உணவு வழங்கும் முறை மற்றும் சுகாதார நிலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget