மேலும் அறிய

’மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு’ மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில் ’மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். என்ற தனியார் கல்லூரியில் ’மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், இ-சேவை மையத்தை பார்வையிட்டார்.

மக்களுடன் முதலமைச்சர்:

மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் தொடர்பான அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கலைஞர் வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில், ஏழை எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி, இந்தியத் துணைக் கண்டமே போற்றும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், தாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமது தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண, ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறையை உருவாக்கி, அனைத்து மனுக்களுக்கும் 100 நாட்களில் தீர்வு கண்டு வரலாற்று சாதனை படைத்தார்கள்.

கள ஆய்வில் முதலமைச்சர்:

அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கைகளைத் திறம்பட கையாண்டு, அவற்றை நிறைவேற்றிட ஏதுவாக, ’முதல்வரின் முகவரித் துறை’ என்ற தனித்துறையை உருவாக்க ஆணையிட்டார்கள். இதன்மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 49 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, ’கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, கள ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொது மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.  

முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பின் நீட்சியாக, அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக ’மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

முகாம்கள்:

’மக்களுடன் முதல்வர்’ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வரும் 18-12-2023 ஆம் தேதி முதல் 06-01-2024 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து 31-1-2024 வரை ’மக்களுடன் முதல்வர்’ திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும்.

30 நாட்களுக்குள் தீர்வு:

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் இம்முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள தெரிவித்தும், துறை அலுவலர்கள் கோரிக்கைகளை அக்கறையோடு பரிசீலித்து அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்கவேண்டிய உதவிகளை எவ்வித தாமதமும் இன்றி, விரைவாகவும் எளிதாகவும் உரிய முறையில் தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
Embed widget