மேலும் அறிய

தமிழகத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது’ - மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி

"தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையம் எங்கும் மூடப்படாது. தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணிகள் மட்டுமே நடக்கின்றது. எதுவும் மூடப்படாது"

தமிழகத்தில் எங்கும் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது என மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். திருப்பூரில் நடக்கும் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் மத்திய இணையமைச்சர் எல். முருகன் கோவைக்கு வருகை தந்தார். அப்போது பாஜகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் இன்று ஓரே நேரத்தில் அர்ப்பணிக்கப்படுகின்றது. 4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

இதே போல செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. திருக்குறளை பிரதமர் முன்னிலைப்படுத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் மூலம் 100 க்கும் மேற்பட்ட வெளி நாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அகில இந்திய வானொலி நிலையம் எங்கும் மூடப்படாது. தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணிகள் மட்டுமே  நடக்கின்றது. எதுவும் மூடப்படாது” என அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து குறித்த கேள்விக்கு, ”அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு சித்திரை ஓன்று தான்” என அவர் தெரிவித்தார். எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அவர் பின்னர் மீண்டும் திரும்பி வந்து, “தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் வழங்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதற்கென ஒரு கால வரம்பு இருக்கின்றது. தமிழகத்தற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும். கட்டாயம் தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள்” என அவர் தெரிவித்தார். தமிழ் தெரியாத ஒருவரை சென்னை தொலைக்காட்சி இயக்குனராக நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “டிடி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். விஜயன் என்பவரும் இருக்கின்றார்” என அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget