மேலும் அறிய

”தரம் இருக்கணும்.. தராதரம் இருக்கணும்..” : அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய அண்ணாமலை..

”செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை ஊழல், வேலை வாங்கி தருவதாக ஊழல், மணல் ஊழல், இப்போது மின்வாரிய ஊழல். ஒரு மனிதருடன் உட்கார்ந்து பேசும்போது தரம் இருக்கணும். தராதரம் இருக்கணும்.”

கோவை குஜராத் சமாஜ் கட்டிடத்தில்  பாரதிய ஜனதா கட்சியின்  தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர் சந்தித்தனர். அப்போது பேசிய அருண் சிங், “இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரொனா மருத்து போடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5  கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நாள் பயணத்தில் புதிய உணர்வு ஏற்படுகின்றது. எல்லா இடங்களிலும் தாமரை மலர துவங்கியிருக்கின்றது. பா.ஜ.க நிர்வாகிகள் கடுமையாக பூத் அளவில் உழைக்கின்றனர். மாநில தலைவர் அண்ணாமலை இரவு பகலாக உழைக்கின்றார். பா.ஜ.க வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்து வருகின்றது.

”தரம் இருக்கணும்.. தராதரம் இருக்கணும்..” : அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய அண்ணாமலை..

இந்தியாவின் வளர்ச்சி சதவீதம் உயர்ந்து வருகின்றது. நாட்டின் ஜிடிபி உயர்ந்து வருகின்றது. 100 லட்சம் கோடி அளவு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020 -  21ல் தமிழகத்திற்பு 3900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு  சுகாதார கட்டமைப்பிற்கான தேவையான  ஏற்பாடுகளை மத்திய அரசு செய்கின்றது. 773 கோடி ரூபாய் தமிழக  சுகாதார கட்டமைப்பிற்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கின்றது. மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியினை வழங்குகின்றது. மாநில அரசு வெளிப்படையாகவும், ஊழல் இல்லாமல் செயல்படுகின்றது. கொரொனா தொற்று காலத்தில் பா.ஜ.க சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் சிறப்பாக செயலாற்றினர்.  99.9 சதவீத விவசாயிகள் பிரதமருடன் இருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டம் உத்திரபிரதேசத்தில்  பாதிப்பை ஏற்படுத்தாது. போராடுபவர்கள் விவசாயிகள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே.

பெட்ரோல்,டீசல்  விலையை குறைக்க  மாநில அரசு வரிகளை குறைக்க வேண்டும். மாநில அரசு வரிகளை குறைத்தால்  விலை குறைய வாய்ப்பு இருக்கின்றது. பிரியாங்க காந்தி விவசாயிகள் மரணத்தில்அரசியல் செய்கின்றார். ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஏன் செல்ல வில்லை என கேள்வி எலுப்பிய அவர் சட்டீஸ்கர் மாநிலங்களில் பல பிரச்சினைகள், தலித் மாணவி கொலை செய்யப்பட்டிருந்தும் ஏன்  செல்லவில்லை” என அவர் தெரிவித்தார்.

”தரம் இருக்கணும்.. தராதரம் இருக்கணும்..” : அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய அண்ணாமலை..

அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கூறுகையில், ”தூத்துக்குடியில் 4 சதவீத கமிசன் வாங்கிக்கொண்டு கான்டிராக்டர் பில் கிளியர் செய்யப்படுகின்றது. தூத்துக்குடியில் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள பில்கள் கேட்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி குறித்து குற்றச்சாட்டு சொன்ன பின்னர் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்வதை போல, ஏதற்காக டான்ஜெட்கோ இந்த தகவலை கேட்டு இ-மெயில் அனுப்ப வேண்டும்?
 
சில கான்ட்ராக்டர்களுக்கு மட்டும் பில்கள் கிளியர் செய்யப்பட்டுள்ளது. 1.59 லட்சம் கோடி கடனில் மின் வாரியம் இருக்கிறது. இதற்கு தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம். தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது தான் காரணம். அமைச்சர் செந்தில்பாலாஜி இவற்றை விஞ்ஞான முறையில் மறுகட்டமைப்பு செய்கிறார். பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்திற்கு  அடுத்த கான்டிராக்ட் கொடுக்க இருக்கின்றனர். அதற்கு தான் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றது. செந்தில் பாலாஜி போக்குவரத்து ஊழல், வேலை வாங்கி தருவதாக ஊழல், மணல் ஊழல், இப்போது மின்வாரிய ஊழல்.

ஒரு மனிதருடன் உட்கார்ந்து பேசும்போது தரம் இருக்கணும். தராதரம் இருக்கணும். நிச்சயமாக செந்தில் பாலாஜியை பதில் சொல்ல வைப்போம். திமுக எம்.பி. வில்சன் வி்.ஜி.ஆர் எனர்ஜிக்கு நீதிமன்றத்தில்  எதற்கு ஆஜராகின்றார். ஒரு புறம் மின்வாரியம் ஆஜராகின்றது. மறுபுறம் திமுக எம்.பி வழகறிஞராக ஆஜரகின்றார். பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்தை யார் வாங்க போகின்றார். நாங்க இதை சும்மா விடமாட்டோம்.
செந்தில் பாலாஜி வாயில் இருந்து பதில் வர வைப்போம்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வீட்டில், திருப்பூர் மாவட்ட ஆதி் திராவிடர் ஹாஸ்டல் சமையலரை மூன்று வேலை சமைக்க வைக்கின்றனர். இது தொடர்பான நமக்கு சொன்ன பெண்ணின் ஆடியோ இருக்கு. அதை ரீலீஸ் செய்ய விரும்பவில்லை. ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வீட்டில் சமைக்க வைப்பதுதான் சமூக நீதியா? முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரில் தலையிட வேண்டும். தூத்துக்குடி சிபிசிஐடி எஸ்.பி மின்வாரிய கான்டிராக்டர்களிடம் நேரில் விசாரணை நடத்தி இருக்கின்றார். முதல்வர் செந்தில் பாலாஜி விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கிறார். தினமும் ஒவ்வொரு விவகாரமாக வெளியிடுவோம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Embed widget