மேலும் அறிய

Annamalai: '2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. தமிழ்நாடு மண்ணில்தான் என் அரசியல்' - அண்ணாமலை

2024 தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாஜகவிற்கு வந்தேன். 2024 ல் தொண்டனாக வேலை செய்வேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”காவல்துறையினருக்கு பிரமோஷன் கிடைப்பதில்லை. கிரேட் 2 பதவியில் இருக்கும் காவல்துறை நண்பர்களுக்கு ப்ரோமோஷன் வராதது கண்டிக்கத்தக்கது. காவல்துறையின் நலத்தை பார்க்க வேண்டும். டிஜிபி பிரமோஷனுக்கு முதலமைச்சரிடம் பேசிக் கொண்டு வர வேண்டும். இதைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். திமுக அரசு வந்த பிறகு, கமிஷன் அரசு கமிஷனுக்காக வேலை செய்கின்றனர். மின்சாரத் துறை அமைச்சர் பேசுவது பாதி தான் உண்மை, பாதி உண்மை இல்லை.

லஞ்சமில்லாமல் இணைப்பா?

ரென்யூபில் எனர்ஜியில் பயனடைந்து வருகிறோம். ரென்யூபில் எனர்ஜி மத்திய அரசின் கனவு. ரென்யூபில் எனர்ஜியில் உலகத் தலைவராக நாம் மாறப் போகிறோம். இதை தமிழக அரசு யூஸ் பண்ணுவதில்லை. சோலார் சப்சிடி கொடுப்போம் என திமுக அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள்? எத்தனை பேருக்கு லஞ்சம் இல்லாமல் இணைப்பு கொடுத்துள்ளார்கள்? 2021-22 ,22-23 ஆண்டை கம்பேர் பண்ணும் பொழுது, தமிழ்நாட்டில் 22% விழுக்காடு மது விற்பனை அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் காவல்துறையால் சாராயம் பிடிக்கப்பட்டுள்ளது. 75% டாஸ்மாக்குகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும்.

கள் விற்பனை செய்ய வேண்டும்:

தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். கள்ளில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை கள்ளால் எப்படி ஈட்டு கொடுக்க முடியும் என்பதை வெள்ளை அறிக்கையில் உள்ளது. வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும். 1985 க்கு பிறகு கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு பாஜகவின் மீது உள்ள சலிப்புத்தன்மையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் இலவசம். சித்தராமையா இலவசத்தில் மூன்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டு விட்டு வேறு செய்கின்றனர். அறிக்கையை மாற்றிவிட்டனர்.

பாஜக அரசு பொருளாதாரமான நாட்டை கொடுத்து சென்றதால் கர்நாடகாவில் பட்ஜெட் நன்றாக இருக்கிறது. பாஜக அரசு நடத்தியதை வைத்து தான் பட்ஜெட் சித்தாராமையா போடுகிறார். 2000 ரூ நோட்டு புழகத்தில் இல்லை. 2000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள். 2000 ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்கு தான் பிரச்சனை. டாஸ்மார்க்கை, கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டியை, எலக்ட்ரிக்சிட்டி பில் கட்டும் இடங்களை மத்திய அரசு மானிட்டரி செய்ய வேண்டும். உதயநிதி ஸ்டாலின் மணி லான்டர். இது குறித்து கேள்வி கேட்டால் பத்திரிக்கையாளர்களிடம் சிரித்து செல்கின்றனர். கவர்னரிடம் சென்றுள்ளோம். நாங்கள் விடுவதில்லை.

விருப்பமில்லை:

கேள்விகள் கேட்டால் ஐயாயிரம் கடைக்கு போனாயா என மின்சாரத்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர்களை கிண்டல் பண்ணுகின்றனர். இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். உதயநிதி ஸ்டாலின் எத்தனை நாள் தப்பிப்பார்? எத்தனை நாள் தப்பித்துப் போகிறார்கள் என பார்ப்போம். 2024 தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாஜகவிற்கு வந்தேன். 2024 ல் தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் டெல்லி அரசுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. 2024 நிற்பவர்களை வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget