மேலும் அறிய

திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

"திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என சொல்ல முடியாது. திமுகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி இல்லத்தில் காவல்துறை சோதனை நடைபெற்றுள்ளது"

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, “26 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு இணைந்துக்கொண்டு இருக்கிறோம். ஏன்? மாற்றம் வந்துவிடாதா என்றுதான். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாட்டாலும் இப்படி தான் இருப்பார்கள் என்பதற்கு ஜெயின் கமிசன் அறிக்கைதான் சான்று.  ராஜிவ் காந்தி கொலை செய்யபடும் முன்பு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. உளவுத்துறை அறிக்கை மீது திமுக அன்று கவனம் செலுத்தவில்லை.

கோட்டை ஈஸ்வரன் கோவில் சம்பவம் நடந்த போது ஆட்சியில் இருந்தவர்கள் தான் திமுக. தேர்தலில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் மாறப்போவதில்லை. இந்த கூட்டம் மதரீதியான கூட்டம் இல்லை, தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டம் தான் இது. இன்று கோவை ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டதா? இன்னும் தப்பவில்லை. தமிழ்நாடு இன்னும் ஆபத்தில் இருந்து தப்பவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சம்பவம் தற்கொலை படை தாக்குதல் என்றோம். ஆனால் சிலிண்டர் விபத்து என இவர்கள் என சொல்லுகிறார்கள். உயிரிழந்த முபின் வீட்டில் 130 கிலோ வெடிபொருட்கள் கிடைத்தது. இதை பார்த்த பிறகும் இது சிலிண்டர் விபத்து என்றார்கள் காவல் துறை சொல்லுகிறது. கோவை மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேர்தல் தான் 2024 நாடாளுமன்ற தேர்தல். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 16 பேரை வெளியே விட ஆட்சி செய்த கட்சியும், ஆட்சியில் உள்ள கட்சியும் விடுவிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.


திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ் மேடையில் அரசியல் பேசக்கூடாது. ஆனால் இன்று நான் பேசியாக வேண்டிய சூழலில் உள்ளேன். பாராளுமன்ற வேட்பாளர்களின் முதல் வேலை இங்கு நினைவு துண் கட்டுவது தான். 2024 ஆம் ஆண்டு நாம் ஜன்னலை திறப்போம். 2024ம் ஆண்டு கதவை திறப்போம். நினைவு தூண்களில் உயிரிழந்த இஸ்லாமிய 6 பேரின் பெயர்களும் இடம்பெறும். தீவிரவாதிக்கும் மதம் தெரியாது. மதம் பிடித்த யானைவிட, மதத்தை தவறாக படித்துவிட்டு கோவையில் திரிகிறார்கள். தமிழ்நாட்டில் கோவைக்கு இரண்டாவது என்.ஐ.ஏ காவல் நிலையம் இங்க வர வேண்டும். முக்கியமான வழக்குகளை இங்கு நடத்த வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதி உருவாகும் இடத்திலிருந்து பிடிக்க வேண்டும். இதை தான் மத்திய அரசு சொல்கிறது. கோவை, ஈரோடு, சேலத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் இருக்கும் இடமாக உள்ளது. வருகின்ற தேர்தலில் பாஜக உறுப்பினரை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என சொல்ல முடியாது. திமுகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி இல்லத்தில் காவல்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் கூட்டணி வைக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கும் என்ன தொடர்பு?இந்தியாவின் மீது உலக நாடுகளின் கண்கள் உள்ளது. உலகில் எந்த நாடுகளுக்கும் வல்லரசு என்ற வார்த்தை பொருந்தாது. உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பிரச்சனை உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு மோடி அரசு நமக்கு தேவை. வலிமையான நாட்டை உருவாக்க பாஜக வேண்டும். எங்கே வேண்டுமானலும் குண்டு வெடிக்கும். அதை மாற்ற பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget