மேலும் அறிய

'ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம்' - அன்புமணி ராமதாஸ்

“ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை. அதனை வைத்து அரசியல் செய்யலாம். சட்டமன்றத்திற்குள் எடுபடாது.”

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி சார்ந்த தொண்டர்கள் பலர் பூங்குத்துக் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கோவை சார்ந்த பிரச்சினைகள் சிலவற்றையும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார். 

அப்போது பேசிய அவர், “ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை. அதனை வைத்து அரசியல் செய்யலாம். சட்டமன்றத்திற்குள் எடுபடாது. தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். காவல்துறையினர் இதனை பாடமாக வைத்துக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். சட்டசபையில் அதிமுகவின் இருக்கை பிரச்னை தொடர்பான கேள்விக்கு, ”இது கட்சி சார்ந்த பிரச்சனை. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும்” என பதிலளித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களின் வாழ்வாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 90% பணிகள் முடிந்ததாக கூறப்படும்  அத்திகடவு அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை? 

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம்' - அன்புமணி ராமதாஸ்

பரம்பிகுளம் அணையில் மதகு சேதமனதால் 12 டி எம் சி நீர் வீணாகியுள்ளது. இனி இது போன்று நடக்க கூடாது. செங்கல் சூளைகளுக்காக செம்மன் அள்ளுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். அதற்கான தேவை உள்ளது. தீபாவளிக்கு மதுக்கடைகளுக்கு இலக்கு வைத்து விற்பனை செய்வது விட மாணவர்கள், குழந்தைகளுக்கான கல்வி தடுப்பூசிகளுக்கு இலக்கு வைத்து அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும். அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவாக செயல்படுத்த வேண்டும். பாண்டியாறு புன்னம்புழா, நல்லாறு பாம்பாறு திட்டம் செயல்படுத்த வேண்டும். சட்டமன்றம் 100 நாட்கள் நடக்க வேண்டும். அதிகமான விவாதம் நடத்தபட வேண்டும். போதை கலாச்சாரம் தடை செய்ய வேண்டும். போதுமான காவலர்கள் இல்லை. ஆகையால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை காலம் என்பதால் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவன பால் விலையை குறைக்க வேண்டும். ஆவின் பால் விலையை விட தனியார் பால் விலையை உயர்த்துள்ளனர் ஒரு ஆண்டில் நாலு முறை விலை உயர்த்தபட்டுள்ளது அதனை கட்டுப்படுத்த வேண்டும். கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தற்போது ஒரு அரசு பள்ளி அறையை பாமக மாடல் பள்ளி அறையாக மாற்றியுள்ளார். அதனை தமிழக முதல்வரும் பள்ளிக் கல்வித்துறையும் பின்பற்றி அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Embed widget