மேலும் அறிய

Crime : கோவையில் 15 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

ஆனைமலை பகுதியில் 15 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 62 வயது முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். 62 வயதான இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடராஜன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து, சிறுமிகளிடம் ஆபாசமாக தொட்டு பேசுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவரது பாலியல் அத்துமீறல்களை வீட்டில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி வீட்டில் சொல்லாமலே, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையினர் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அம்மாணவிகள் படித்து வரும் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது மாணவிகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' குறித்தும், பாலியல் அத்துமீறல் குறித்தும் எடுத்துரைத்துக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடமும் கருத்து கேட்டு, அவர்களது சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.

அப்போது மளிகைக் கடைக்காரரின் பாலியல் தொல்லை குறித்து சொல்வதற்கு இதுதான் சரியான நேரம் எனக் கருதிய 13 வயது மாணவி ஒருவர் பேசுவதற்கு எழுந்தார். தலைமை ஆசிரியையிடம், பேசிய மாணவி, அவர் வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவர் மட்டுமல்லாமல் அங்கு படிக்கும் 9 முதல் 13 வயது வரையிலான மேலும் 14 மாணவிகள் தங்களுக்கு அந்த கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை, உடனடியாக இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் மளிகை கடைக்காரர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடராஜனை காவல் துறையினர் கைது செய்தனர். நடராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்தும், அவரால் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனாரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாகராஜபுரம் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில், வயிறு பெரிதாகி வந்ததால் கர்ப்பமானது வெளியே தெரிந்து விடும் என்ற அச்சத்தில் நேற்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அச்சிறுமி அனுமதிக்கப்பட்ட போது, அளித்த தகவலின் பேரில் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக காரணமாக இருந்த பக்கத்து வீட்டு இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget