மேலும் அறிய

சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு ; அதிமுக வெற்றியை உறுதி செய்த நீதிமன்றம்

அப்பதவிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் பதிவான 5357 ஓட்டுகளில் செளந்திரவடிவு 2553 ஓட்டுகளும், சுதா 2551 ஓட்டுகளும், மல்லிகா 65 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

கோவை சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறு வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், அதிமுக வேட்பாளர் வெற்றியை நீதிமன்றம் உறுதி செய்தது.

தமிழ்நாட்டில் கடந்த 2019 ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பெரியநாயகன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சுதா என்பவரும், அதிமுக ஆதரவு பெற்ற செளந்திரவடிவு என்பவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது திமுக ஆதரவு பெற்ற சுதா 2553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிப் பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி, மறு வாக்கு எண்ணிக்கையினை அடுத்த் 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என உத்திரவிட்டார். சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலுக்கு மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்கவும், கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மறு வாக்கு எண்ணிக்கையை ஒளிப்பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும், மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கொண்டே அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்ற உத்திரவில் குறிப்பிடப்பட்டது.

அதன்படி கடந்த ஜனவரி 24 ம் தேதி குருடம்பாளையம் அருகே உள்ள அருணா நகர் சமுதாய நலக்கூடத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் அறிவிப்பு நோட்டீஸ் இரண்டு தரப்பினருக்கும் பெரியநாய்க்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

இதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய 12 பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜசேகர் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்தார். அதன்படி சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் பதிவான 5357 ஓட்டுகளில் செளந்திரவடிவு 2553 ஓட்டுகளும், சுதா 2551 ஓட்டுகளும், மல்லிகா 65 ஓட்டுகளும் பெற்றுள்ளனர் எனவும், இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செளந்தரவடிவு வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். இதனால் அதிமுக வேட்பாளர் செளந்திரவடிவு வெற்றியை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget