மேலும் அறிய

கோவையில் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த பாட்டி கைது..!

துர்கேஷ் பிறந்த நேரம் சரியில்லாதால் தான் மகளும், மருமகனும் பிரிந்ததாகவும், அதனால் குழந்தையின் தலையை சுவரில் அடித்ததோடு பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.

கோவை லாலி ரோடு அருகேயுள்ள அம்பகம் வீதியை சேர்ந்தவர் நந்தினி. 24 வயதான இவர் 5 ஆண்டுகளுக்கு முன், அத்தை மகன் உறவு முறையை சேர்ந்த நித்யானந்தம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் சாய்கிருஷ்ணா என்ற மகனும், ஒரு வயதில் துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நந்தினி மற்றும் நித்யானந்தம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 8 மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். முதல் மகன் சாய்கிருஷ்ணாவை நித்யானந்தமும், இரண்டாவது மகன் துர்கேஷை நந்தினியும் வளர்த்து வந்தனர். நந்தினி தனது தாய் நாகலட்சுமி மற்றும் துர்கேஷ் உடன், அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நாகலட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத்தால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் நந்தினி ஹோட்டல் வேலைக்கு சென்று வந்த நிலையில், குழந்தை துர்கேஷை நாகலட்சுமி கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு வேலை முடித்து நந்தினி வந்த போது, துர்கேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். குழந்தை எப்போது தூங்கியது என கேட்ட போது, இரவு 7.30 குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு குழந்தையை வீட்டின் உள்ளே வைத்து கதவை பூட்டி விட்டு குப்பை கொட்ட சென்றதாகவும், பின்னர் வந்து பார்த்த போது தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்ததாகவும் நாகலட்சுமி தெரிவித்துள்ளார். பின்னர் நந்தினி தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை பார்த்த போது, வாயில் நுரை தள்ளி மயக்க நிலையில் இருந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போது, வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து சாய்பாபாகாலணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் துர்கேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நந்தினி புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது குழந்தை துர்கேஷ் முகத்திலும், வாயிலும் காயங்கள் இருந்ததும், நாகலட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசியதும் காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நாகலட்சுமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, துர்கேஷ் பிறந்த நேரம் சரியில்லாத்தால் தான் மகளும், மருமகனும் பிரிந்ததாகவும், அதனால் குழந்தையின் தலையை சுவரில் அடித்ததோடு பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நாகலட்சுமியை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget