மேலும் அறிய

Crime: திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூபாய் 20 லட்சம் அபேஸ்..! தொழிலதிபரிடம் கைவரிசை காட்டிய பள்ளி ஆசிரியை..!

சொந்தமாக தொழில் செய்வதாகவும், அதற்கு உதவி செய்யுமாறு கூறியதால், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதனப் பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை ராஜேஷ் கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (44). தொழில் அதிபரான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன், அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேனின் மூலமாக அவரது சகோதரி கோவை போத்தனூர் சத்ய சாய் நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

பள்ளி ஆசிரியை:

ஆரம்பத்தில் ராஜேஷை திருமணம் செய்து கொள்வதாகவும், தான் திருமணம் ஆகாத பெண் எனக் கூறி ஹேசல் ஜேம்ஸ் ராஜேஷ் உடன் பழகி வந்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகி விட்டது என்றும், கணவர் இறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இருந்த போதும் ராஜேஷ் ஹேசல் ஜேம்ஸ் உடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். 

திடீரென ஒரு நாள் ஹேசல் ஜேம்ஸ் தனக்கு திருமணமானது உண்மை என்றும், கணவன் இறக்கவில்லை என்றும், விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதை நம்பிய ராஜேஷ் 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும், அதற்கு உதவி செய்யுமாறு கூறியிருக்கிறார்.

20 லட்சம் 

இதனால் ராஜேஷ் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதனப் பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். பொருட்களை ஹேசல் ஜேம்ஸ் தனது தந்தை பெயரில் அனுப்புமாறு கூறி வாங்கியுள்ளார். ஸ்கோடா காரை தனது அண்ணன் விவின் கிறிஸ்டோ பெயரில் ஹேசல் ஜேம்ஸ் பதிவு செய்து கொண்டுள்ளார்.

Crime: திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூபாய் 20 லட்சம் அபேஸ்..! தொழிலதிபரிடம் கைவரிசை காட்டிய பள்ளி ஆசிரியை..!

இந்நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்ததும், இதேபோல பல ஆண்களிடம் பழகி வந்ததும் ராஜேஷ்க்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் கேட்ட போது, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது எனக் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஹேசல் ஜேம்ஸ் ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

கொலை மிரட்டல்:

பின்னர் ராஜேஷ் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது எனவும், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர் ஹேசல் ஜேம்ஸ் 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டி இருக்கிறார். இதையடுத்து குடும்பத்துடன் இணைந்து தன்னை ஏமாற்றி பணம் பறித்ததாக போத்தனூர் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஹேசல் ஜேம்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget