மேலும் அறிய

போலி பாஸ்போர்ட் மூலம் கோவை வந்த வங்கதேச இளைஞர் கைது ; தேசிய கீதம் தெரியாததால் சிக்கிய சம்பவம்..

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், ஷார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் இருந்த பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியேற்றத்துறை அதிகாரிகளை பரிசோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஷார்ஜாவில் இருந்து நேரடியாக கொல்காத்தா செல்லாமல் எதற்காக கோவை விமான நிலையம் வந்தீர்கள்? குடும்பத்தினர் எங்கு உள்ளார்கள்? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பயணியிடம் இந்திய தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால் அவருக்கு தேசிய கீதத்தில் உள்ள சில வார்த்தைகள் கூட தெரியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்த அன்வர் உசேன் என்பதும், போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது. 

கடந்த 2018 ம் ஆண்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக அவர் பணி புரிந்ததுள்ளார். அப்போது பெங்களூருவில் போலியாக பிறப்பு சான்றிதழ் தயாரித்து கொல்காத்தா முகவரியில் ஆதார் எண் பெற்று, அந்த ஆவணங்களை பயன்படுத்தி கடந்த 2020 ம் ஆண்டில் பாஸ்போர்ட் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அதனை பயன்படுத்தி ஐக்கிய அரபு ஏமிரெட்ஸ்ட் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு போதிய சம்பளம் கிடைக்காததால், மீண்டும் திருப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த போது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து குடியேற்ற துறை அதிகாரிகள் அன்வர் உசேனை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அன்வர் உசேனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget