தேர்தல் ரத்து இல்லை, நாளை திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

எந்தத் தொகுதியிலும் தேர்தல் ரத்து இல்லை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாளை திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் நாளை ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு, ஏ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் இந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.இதனால், சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக வதந்தி பரவ தொடங்கியது. தேர்தல் ரத்து இல்லை, நாளை திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தற்போது, இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைசி ஒருமணி நேரம் கொரோனா நோயாளிகள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம்” என்று கூறினார்.

Tags: Tamilnadu Election canceled Chief Electoral Officer of Tamil Nadu sathya pratha sahoo

தொடர்புடைய செய்திகள்

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

டாப் நியூஸ்

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!