Youtuber Irfan car accident: பிரபல யூடியூபர் இர்ஃபான் கார் விபத்தில் சிக்கியது - மூதாட்டி பலியான சோகம்
சென்னை மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு youtube இர்ஃபான் கார் விபத்து சிக்கியது.
சென்னை மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு youtuber இர்ஃபான் கார் விபத்து சிக்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் முல்லை நகர் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின், மனைவி பத்மாவதி வயது 55 நேற்று இரவு மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த பொழுது, பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி உயிரிழந்தார். இவர் பொத்தேரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனத்தில் youtuber இர்ஃபான் இருந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தை சென்னை சித்தாலப்பாக்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். விபத்தில் மூதாட்டி சிக்கி உயிரிழந்ததை தொடர்ந்து இதுகுறித்து வழக்கானது தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்