மேலும் அறிய
Advertisement
WATCH VIDEO| குதிரை மீது அமர்ந்து 3 மணிநேரத்தில் 1,389 அம்புகளை எய்து உலக சாதனை.. வாகை சூடிய முத்தமிழ்ச்செல்வி
’’மண்ணிவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வேலுநாச்சியார்போல் உடை அணிந்து தொடர்ச்சியாக குதிரை மீது அமர்ந்து 3 மணி நேரம் 1,389 அம்புகள் எறிந்து உலக சாதனை படைத்த முத்தமிழ் செல்வி’’
குடியரசு தின விழாவையொட்டி புது டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழ் நாட்டில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட ஊர்தி பங்குபெற்றது தற்போது தமிழகம் முழுவதும் அந்த ஊர்தி மக்கள் பார்வைக்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
புறக்கணிக்கப்பட்ட வேலுநாச்சியார் ஊர்தி : 3 மணி நேரத்தில் 1389 அம்புகள் உலக சாதனை படைத்த பெண் pic.twitter.com/Blk7OkOlLa
— Kishore Ravi (@Kishoreamutha) January 28, 2022
இந்நிலையில் சென்னை படப்பை அடுத்த மண்ணிவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான முத்தமிழ்செல்வி என்ற பெண்மணி தொடர்ச்சியாக குதிரை மீது அமர்ந்து சுமார் 8 மீட்டர் தொலைவில் இருந்து 3 மணி நேரம் அம்பு எறிதல் நிகழ்வு நடைபெற்றது. அம்பு எரிதல் நிகழ்வின் போது அப்பகுதி மக்கள், இளைஞர்கள் ஆராவாரத்துடன் உற்ச்சாகபடுத்தினர். பின்னர் 3 மணி நேரம் முடியும் தருவாயில் 1,389 அம்புகள் எறிந்து யுனிக்கோ உலக சாதனை படைத்தார். அதற்க்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் யுனிக்கோ நிறுவனம் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொ்ண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சாதனை படைத்த முத்தமிழ்செல்வி நான் புரிந்த இந்த சாதனையானது தமிழகத்தை சேர்ந்த வீரமங்கை வேலு நாச்சியாருக்காக எனவும் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆங்கிலேயர் கொடி இறக்கபட்டு அனுமன் கொடியை ஏற்றியவர் எனவும், இதுபோன்ற வீரபெண்மணிகள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் விழிப்புணர்வுக்காகவும் பெண்கள் சாதனை புரிய முன்வரவேண்டும் என்பதற்க்காக 3 மணிநேரத்தில் 1,389 அம்புகள் எறிந்து யுனிக்கோ உலக சாதனை படைத்ததாக கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion