மேலும் அறிய

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதில் சிக்கல்-தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

’’நிலத்துக்கான இழப்பீட்டை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அனுமதியின்றி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்’’

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலைச் சீரமைக்கவும், கோயில் பராமரிப்புக்குத் தொகுப்பு நிதியும் உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, ஆட்சியர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

Shocking News : சாலையில் கிடந்த ரத்த சிரஞ்சுகள்.. அதிர்ந்து போன மக்கள் | Thiruvarur | Nannilam | Blood syringe

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதில் சிக்கல்-தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

தற்போது  அர்த்தநாரீஸ்வரர் கோயில் பூஜையின்றி, பாழ்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. ஆனால் கோயில் நிலத்தில் அரசு கை வைக்கக்கூடாது என இந்து முன்னணி அமைப்பு உள்ளிட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கோயில் நிலத்திற்கு சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்கும் வரை, கோயில் நிலத்தில் அரசு கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்துள்ளது.

Vijayakanth Latest Photo: கெத்தா..STYLE-லா..படம் பார்த்த கேப்டன்!

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதில் சிக்கல்-தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்ததுடன், நிலத்தை மதிப்பீடு செய்ய இரு குழுக்களை நியமித்தது. இவ்விரு குழுக்களின் மதிப்பீடும் குறைவாக உள்ளதாக, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் குறிப்பிட்ட போது, ஆறு மதிப்பீட்டாளர்களைப் பரிந்துரைக்க அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதிப்பீட்டாளர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை என, மனுதாரர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதில் சிக்கல்-தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

இதையடுத்து, கோயில் நிலத்தைச் சுதந்திரமாக மதிப்பீடு செய்ய ஏதுவாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மதிப்பீட்டாளர்களைப் பரிந்துரைக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதில் சிக்கல்-தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

முன்னதாக, சிதிலமடைந்த கோயிலைச் சீரமைக்கவும், கோயில் பராமரிப்புக்காகத் தொகுப்பு நிதி உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், நிலத்துக்கான இழப்பீட்டை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அனுமதியின்றி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

TN assembly: TOURISM DEVELOPMENT இதுதான் எங்க PLAN ! சுற்றுலாத்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள் !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்

Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்

ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்

"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?

Embed widget