மேலும் அறிய

Vijay Politics: "50 வருசத்துல எத்தனையோ நடிகர்களை பார்த்தாச்சு.." விஜயின் அரசியல் வருகை குறித்து வாகை சந்திரசேகர் பேட்டி!

vagai chandrasekar: பெரியார், காமராஜர், அம்பேத்கர் என மூன்று தலைவர்களை மட்டுமே நடிகர் விஜய் குறிப்பிட்டு பேசியிருப்பது அவருடைய கணிப்பு என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்,தடை கிடையாது, 50 ஆண்டு கால ஆட்சியில் எத்தனையோ நடிகர்களை பார்த்தோம், திமுகவில் இருந்த நடிகர்களையும் பார்த்தோம், திமுகவிலிருந்து விலகி சென்ற நடிகர்களையும் பார்த்தோம், ஆகையால் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும், காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் பேட்டி.
 
கலை உலகில் கலைஞர்
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில்  முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர், கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக "கலை உலகில் கலைஞர்" எனத் தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவரும், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவருமான வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி,கலைஞர் திரை உலகில் செய்துள்ள மாற்றங்களையும்,பணிகளையும், பட்டியலிட்டு பேசினார்.
 
எத்தனையோ நடிகர்களை பார்த்தோம்
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், "நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், தடை கிடையாது, 50 ஆண்டு கால எத்தனையோ நடிகர்களை பார்த்தோம், திமுகவில் இருந்த நடிகர்களையும் பார்த்தோம், திமுகவிலிருந்து விலகி சென்ற நடிகர்களையும் பார்த்தோம், ஆகையால் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும், திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும்.
 
மக்கள் தான் கூற வேண்டும்
 
பெரியார், காமராஜர், அம்பேத்கர் என மூன்று தலைவர்களை மட்டுமே நடிகர் விஜய் குறிப்பிட்டு  பேசியிருப்பது அவருடைய கணிப்பு, ஆனால் மக்களிடம் சென்று நன்மைகளை செய்தவர்களை யார் என்ற பட்டியல் மக்கள் தான் கூற வேண்டும், அந்த வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சாதனை செய்த எல்லா தலைவர்களையும் போற்றக்கூடிய இயக்கம் தான் திமுக.
 
எனக்கு எப்பொழுதும் உடன்பாடே கிடையாது
 
ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது எனக்கு எப்பொழுதும் உடன்பாடே கிடையாது, அவர் கூறிய கருத்துக்கள், பொதுமக்கள் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என முடிவு செய்தால் அங்கே முடிந்துவிடும் இதற்கு முடிவு பொதுமக்கள் கையில் தான் உள்ளது. இயல் இசை நாடக கலைஞர்கள் 50 ஆண்டு பொன்விழாவை ஒட்டி சென்னையில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் வகையில் 10 ஆயிரம் கலைஞர்கள் ஒரே இடத்தில் இசையமைக்கும் படி பொன்விழா கொண்டாடும் வகையில் ஆலோசனை செய்து வருகிறோம் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டு நடைபெறும் " என காஞ்சிபுரத்தில்  வாகை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ,க.செல்வம், எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget