மேலும் அறிய

Dual Degree: ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்... யுஜிசி வெளியிட்ட விதிமுறைகள் - முழு விவரம்

ஒரு பட்டப் படிப்பு வகுப்பு நேரம், மற்றொரு வகுப்புடன் பாதிக்கப்படாமல், வகுப்புகள் ஒன்றோடொன்று முரண்படாமல் இருக்க வேண்டும். 

ஒரே நேரத்தில் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ இரண்டு முழுநேரப் படிப்புகளைப் படிக்கலாம் என்று  யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

முன்னதாக ஒரு மாணவரால் ஒரு நேரத்தில் ஒரு முழு நேரப் படிப்பை மட்டுமே படிக்க முடியும். வேண்டுமெனில் ஆன்லைன்/ குறுகிய கால / டிப்ளமோ படிப்புகளைப் படிக்க மட்டுமே யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது. 

இந்த சூழலில் அண்மையில் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் படிப்புகளுக்கும் புதிய அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், ''முன்னதாக மார்ச் 31ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி, ஒரே நேரத்தில் முறையான மற்றும் முறைசாராக் கல்வி முறைகள் மூலம் வெவ்வேறு படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாணவர்கள் வெவ்வேறு திறன்களை அடையப் போதிய சுதந்திரம் வழங்கப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளைப் படிப்பதற்கான வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

''1. மாணவர் இரண்டு டிப்ளமோ படிப்புகளையோ, 2 இளங்கலைப் படிப்புகளையோ அல்லது 2 முதுகலை படிப்புகளையோ ஒரே நேரத்தில் படிக்கலாம். 

2. இரண்டு முழு நேரப் படிப்புகளையும் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ படிக்கலாம். 

3. முதுகலைப் படிப்புக்குத் தயாரான ஒரு மாணவர், தனக்கு சம்பந்தமில்லாத வேறு ஒரு தளத்தில் இளங்கலைப் படிப்பை மேற்கொள்ள விரும்பினாலும் படிக்கலாம். எனினும் ஒரு பட்டப் படிப்பு வகுப்பு நேரம், மற்றொரு வகுப்புடன் பாதிக்கப்படாமல், வகுப்புகள் ஒன்றோடொன்று முரண்படாமல் இருக்க வேண்டும். 



Dual Degree: ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்... யுஜிசி வெளியிட்ட விதிமுறைகள் - முழு விவரம்

4. ஒரு மாணவர் இரண்டு பட்டங்களை ஒரே நேரத்தில் படிக்கலாம். ஒன்றை முழுநேர நேரடி முறையிலும் மற்றொரு படிப்பை திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் கல்வி மூலம் படிக்கலாம். அல்லது 2 தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் கல்வி இரண்டையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்.

5. தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் கல்வி மூலம் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகளைப் படிக்கும்போது, யுஜிசி/ மத்திய அரசு அனுமதி பெற்ற / தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் மூலம் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே படிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

6. இந்த வழிகாட்டுதல்களின் கீழ் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள், யுஜிசி மற்றும் அந்தந்த தன்னாட்சி பெற்ற/ தொழில்முறை கவுன்சில்களால் அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படும்.

7. பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்ட தேதியில் இருந்து இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும். அறிவிப்பு முந்தைய நாட்களில் ஏற்கெனவே இரண்டு பட்டப் படிப்புகளைப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த சலுகைக்கு உரிமை கோர முடியாது.

8. இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பொருந்தும். பிஎச்.டி. படிப்புகளுக்கு இவை பொருந்தாது''.

இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.

*

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இனிமேல் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, முனைவர் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி. படிக்க விரும்புவோர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழை வெளுக்குமா? 27 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
பெண்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் Okinawa Ridge 100! சிங்கிள் சார்ஜில் 149 கி.மீட்டர் மைலேஜ் கேர்ள்ஸ்
பெண்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் Okinawa Ridge 100! சிங்கிள் சார்ஜில் 149 கி.மீட்டர் மைலேஜ் கேர்ள்ஸ்
சிங்கிள் சார்ஜில் 252 கி.மீட்டர் மைலேஜ்! OLA Roadster X இ பைக்கின் விலை எவ்ளோ? வாங்கலாமா?
சிங்கிள் சார்ஜில் 252 கி.மீட்டர் மைலேஜ்! OLA Roadster X இ பைக்கின் விலை எவ்ளோ? வாங்கலாமா?
Embed widget