மேலும் அறிய

கழிப்பறை வசதி ; பயணியிடம் தனியார் பேருந்து மோசடி ! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

கழிப்பறை வசதி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு , அதை பயன்படுத்த அனுமதிக்காத தனியார் பேருந்து நிறுவனம் , பயணிக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( வயது 42 ) இவர் சென்னை வடக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்த அந்த மனுவில் ; 

சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த மே, 22 - ல் , ஆன்லைன் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்தேன். பேருந்தில் மொபைல் சார்ஜிங் , புத்தகம் வாசிக்க மின் விளக்கு , குடிநீர் பாட்டில் , கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன என " க்ரிஷ் பஸ் டிராவல்ஸ் " நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த வசதிகளுக்கும் சேர்த்து கட்டணமாக 1,182 ரூபாய் வசூலித்தனர். ஆனால், பயணத்தின் போது கழிப்பறையை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலம் கழிக்க பயன்படுத்தக் கூடாது. மீறினால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றனர்.

இது தொடர்பாக, எச்சரிக்கை வாசகத்தை பேருந்தில் ஒட்டியிருந்தனர். எனவே, நியாயமற்ற வர்த்தகம் , பயணிகளை ஏமாற்றும் நோக்கில் ஈடுபட்ட தனியார் பேருந்து நிறுவனம் , 50,000 ரூபாய் இழப்பீடும் டிக்கெட் கட்டணத்தையும் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் கண்ணன் டி. கோபிநாத் , உறுப்பினர்கள் கவிதா வி.ராம மூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் ; 

பேருந்து நிறுவனம் தரப்பில் யாரும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இந்த புகாரில் உள்ள பிரச்சனை பொது முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தவறான விளம்பரம் வெளியிட்டு , இது போல சுரண்டல் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி , எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றி , பயணியர் அத்தகைய வசதிகளை பயன்படுத்த பேருந்து நிர்வாகம் உடனே அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அத்தகைய தவறான விளம்பரத்தை உடனே இணைய தளத்தில் இருந்து நீக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10,000 ரூபாய் இழப்பீடாக " க்ரிஷ் பஸ் டிராவல்ஸ் " நிறுவனம் வழங்க வேண்டும். தவறினால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கூவம் ஆற்றில் திடீர் உத்தரவு! NHAI-க்கு சென்னை மாநகராட்சி வைத்த கெடு – அக்டோபர் 15 தான் கடைசி!
கூவம் ஆற்றில் திடீர் உத்தரவு! NHAI-க்கு சென்னை மாநகராட்சி வைத்த கெடு – அக்டோபர் 15 தான் கடைசி!
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget