SI Exam free coaching: செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்.ஐ. தேர்வுக்கான இலவச பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி..?
TNUSRB : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Uniformed Services Recruitment Board )
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் ( TNUSRB ), உதவி ஆய்வாளர் ( Sub inspector ) பணிக்காலியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த பணிக்காலியிடங்கள் 615 ஆகும். இப்பணிக்காலியிடங்களுக்கு கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் வாயிலாக விண்ணப்பிக்க துவங்கும் நாள் 01.06.2023, விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும். இப்போட்டித்தேர்வுக்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு 01.07.2023 அன்றைய தேதியில் பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதுக்கள்ளும் இருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க www.tnusrb.tn.gov.in இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி
இப்போட்டித்தேர்வுக்கான உடற்தகுதி உயரம் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ஆண்கள் 170 செ.மீ, பெண்கள் 159 செ.மீ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆண்கள் 167 செ.மீ மற்றும் பெண்கள் 157 செ.மீ இருக்க வேண்டும். எனவே, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இப்போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் துவங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மேற்காணும் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் உடற்தகுதி உடையவர்கள் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படஉள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் தொலைபேசி வாயிலாக ( 044-27426020 மற்றும் 9499055895) தொடர்புகொண்டு விருப்பத்தினை தெரிவிக்குமாறும், இடம் மற்றும் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்யுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் தெரிவித்துள்ளார். இப்பயிற்சி வகுப்புக்கு ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் பங்கேற்று பயனடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் எஸ்.ஐ காவல்துறை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்