மேலும் அறிய

Kilambakkam Bus Stand: ஹாப்பி! ரூ.40 இருந்தால் போதும் சென்னையில் எங்கும் பயணிக்கலாம்! கிளாம்பாக்கத்தில் புதிய சேவை!

Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 கூடுதல் கட்டணத்தில், எந்த பகுதிக்கும் பயணிக்கலாம் என்ற புதிய சேவையை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

கிளாம்பாக்கத்தில் புதிய சேவை:

இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , இன்று (29.02.2024)  தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

திட்டத்தின் விவரங்கள்:

மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும்,  சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள் 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் 01.03.2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்விழாவின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆங்பி ஜான் வர்கீஸ் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. மோகன், மாபோக இணை மேலாண் இயக்குநர் குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய சலுகை பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget February 17 : கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்கள்; அரசே துரோகம் செய்வதா? அன்புமணி கேள்வி
நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்கள்; அரசே துரோகம் செய்வதா? அன்புமணி கேள்வி
தொடரும் போராட்டம்; சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
தொடரும் போராட்டம்; சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget February 17 : கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
கொத்து கொத்தாக புதிய அறிவிப்புகள் வரப்போகுது.! இடைக்கால பட்ஜெட் ரெடி - தேதி அறிவித்த சபாநாயகர்
நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்கள்; அரசே துரோகம் செய்வதா? அன்புமணி கேள்வி
நீதி கேட்டு போராடும் ஊராட்சி செயலாளர்கள்; அரசே துரோகம் செய்வதா? அன்புமணி கேள்வி
தொடரும் போராட்டம்; சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
தொடரும் போராட்டம்; சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
India-US Trade Deal: இந்தியப் பொருட்களுக்கு இனி 0% வரி.. நண்பருக்காக இறங்கிய டிரம்ப்.. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்கள்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
EPS ADMK alliance: கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
கொங்கு மண்டலத்தை மொத்தமாக தூக்க பிளான் போட்ட எடப்பாடி.! அடுத்தடுத்து குவியும் ஆதரவு- குஷியில் அதிமுக
Tvk Vijay: பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
பனையூருக்கு வராதீங்க.. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நண்பா.. நண்பீஸ்- கதறும் விஜய்
GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! இன்று ஒரே நாளில் 5,000 அதிகரித்த வெள்ளி- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.! இன்று ஒரே நாளில் 5,000 அதிகரித்த வெள்ளி- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
Embed widget