மேலும் அறிய

மீட்பு பணிகள் முடிந்தது.. சரிந்து விழுந்த பெட்ரோல் பங்க் மேற்கூரை கீழே யாரும் இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதி

இந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி இருந்ததால் பாரம் தாங்காமல் மேற்கூரை சரிந்து விழுந்தது எனக் கூறப்படுகிறது. 

சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் சரிந்து விழுந்த மேற்கூரையின் அடியில் சிக்கி இருந்த 13 பேர் மீட்கப்பட்டனர். இதில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த கந்தசாமி என்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விபத்து ஏற்பட்ட சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலைக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர், விபத்து நடைபெற்ற பெட்ரோல் பங்கில் விபத்து குறித்தும் அதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ இதுவரை இதுபோன்ற விபத்து நடைபெற்றதில்லை. இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் வருத்தத்தை அளிக்கும் வகையில் மரணமடைந்துள்ளார். 

சரிந்து விழுந்த மேற்கூரைய அப்புறபடுத்த மின்னணு முறையிலோ அல்லது கைகளினாலோ அப்புறப்படுத்த முடியாது. அப்படி அப்புறப்படுத்த முயற்சி செய்தால், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் சேமித்து வைத்திருப்பார்கள் என்பதால் பெரும் விபத்து ஏற்பட்டுவிடும். இதனால் ஐ.ஓ.சி.எல்-இல் இருந்து வந்துதான் அப்புறப்படுத்த முடியும். மேலும் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டது.  சரிந்து விழுந்த மேற்கூரைக்கு கீழ் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். மேற்கூரைக்கு கீழ் யாரும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

பெட்ரோல் பங்க் மட்டும் இல்லாது அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் மேற்கூரையின் நிலைத்தன்மையை முறையக பராமரிக்க வேண்டியது அவரவர் கடமை. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு 17 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என கூறுகிறார்கள், பெட்ரோல் பங்கின் பராமரிப்பு குறித்தும் இந்த விபத்து குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். 

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மழைக்கு ஒதுங்கியவர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. சைதாப்பேட்டையில் உள்ள ஜோன்ஸ் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்புப்பணிகளை செய்தனர்.  இந்த சம்பவத்தில் மேற்கூரையின் கீழே சிக்கி  பெட்ரோல் பங்கின் ஊழுயர் கந்தசாமி என்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மீட்புப் பணிகளைச் செய்தனர். சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் இருந்து 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மீனம்பாக்கம், சாந்தோம், மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணியில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. போரூர், பழவந்தாங்கல், வளசரவாக்கத்திலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மீனம்பாக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Embed widget