Tamil Nadu Rain: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை...! குடையுடன் வெளியில போங்க..
TN Weather : தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![Tamil Nadu Rain: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை...! குடையுடன் வெளியில போங்க.. Tamil Nadu Heavy rains likely in 22 districts of Do you know which districts Tamil Nadu Rain: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை...! குடையுடன் வெளியில போங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/15/2a660676b48555a10a2a1afe7bd329701665822691934571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2022
”6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு”
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2022
”22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு”
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை,விருதுநகர், சிவகங்கை, திருச்சி,கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் ஆகிய 22 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2022
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/h6mQD9aRFH
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2022
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2022
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-10-15-15:07:40 Light rain very likely to occur over CHEYYUR,MADURANTAKAM areas within next 2 hours pic.twitter.com/qYDcRfsFC5
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 15, 2022
நாளை கனமழைக்கு வாய்ப்பு
திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை,விருதுநகர், தென்காசி,ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: சேலம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு; பூலாம்பட்டி படகுத்துறை இடிந்து விழுந்தது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)