கோயம்பேடு : திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : பிஸியான சாலையில் போக்குவரத்து நெரிசல்..!
கோயம்பேடு ரவுண்டானா பாலம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் பிரதானமாக விளங்குவது கோயம்பேடு. மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த இடத்தில் இருந்து பேருந்து சேவைகள் 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் எப்போதும் பரபரப்பாக இயங்க கூடியவை.
கோயம்பேட்டைச் சுற்றி மதுரவாயல், திருமங்கலம், அமைந்தகரை, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகள் உள்ளன. கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலையும் எப்போதும் பரபரப்பாக இயங்கும் சாலை ஆகும். மேலும். அந்த பகுதியில் உள்ள ரவுண்டானா பாலமும் வெளி மாவட்டங்கள் நகரத்திற்கும் வருவதற்கும், சரக்கு வாகனங்கள் செல்வதற்கும் என்று எப்போதும் போக்குவரத்துடனே காணக்கூடிய பாலம் ஆகும்.
இந்த நிலையில், இன்று திடீரென அந்த பாலத்தின் வழியே வந்து காரில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் முழுவதும் அந்த தீ பரவியுள்ளதால், காரில் இருந்து பயங்கரமாக கரும்புகை வெளியேறி வருகிறது. தற்போது வரை சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவில்லை. இருப்பினும் கார் தீப்பிடித்த வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரின் உரிமையாளர் யார்? கார் எப்படி தீப்பிடித்து எரிந்தது? போன்ற எந்தவித விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.