Top News | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்
சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை, நிறமியை ஏரிகள் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 52 ஏரிகள் முழுதுமாக நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலை பள்ளியில் மத நம்பிக்கையை இழிவுபடுத்திய ஆசிரியர் ஜாய்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் முத்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி லட்சுமி நரசிம்மன். இவர் நிலத்திற்கு பட்டா வழங்க இலஞ்சம் கேட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இலஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ-க்கு 9 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒன்றரை மாதங்களாக கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் தேங்கிக்கிடப்பதால் மழையில் நனைவதாக புகார் தெரிவித்துள்ளனர்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 52 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 120 ஏரிகள் 70%-100% , 135 ஏரிகள் 50% - 75% , 185 ஏரிகள் 25% - 50% , 417 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020-21 ஆம் ஆண்டுக்கான சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான ரூ.1,597.18 கோடியை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவிடம் மற்றும் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகப் பணிகளில் காலதாமதம் கூடாது என்று பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.